பெய்ரூட் பயங்கர வெடி விபத்து நிகழ்ந்து 4 நாட்களாகியும் இன்னும் இத்தனை பேரை காணவில்லை!

Report Print Basu in ஏனைய நாடுகள்
184Shares

உலகையே உலுக்கிய லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் நிகழ்ந்த வெடி விபத்துக்குப் பின்னர் இன்னும் 60க்கும் மேற்பட்டவர்களைக் காணவில்லை என்று அந்நாட்டு சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது

ஆகஸ்ட் 4ம் திகதி செவ்வாயன்று, பெய்ரூட் துறைமுகத்தில் ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தால் நகரம் முழுவதும் சிதைந்தது.

இந்த வெடிவிபத்தை தொடர்ந்து லட்சக்கணக்கான மக்கள் நகரத்தை விட்டு வெளியேறிவிட்டதாக யுனிசெப் மதிப்பிட்டுள்ளது.

பெய்ரூட் துரைமுகத்தில் உள்ள கிடங்கில் பாதுகாப்பற்ற நிலையில் பல வருடங்களாக இருந்து 2,750 டன் அம்மோனியம் நைட்ரேட் தீ பிடித்ததால் இந்த வெடி விபத்து ஏற்பட்டது.

இந்நிலையில், பெய்ரூட் துறைமுகத்தில் வெடி விபத்து ஏற்பட்டு நான்கு நாட்களுக்குப் பின்னர் இன்னும் 60க்கும் மேற்பட்டவர்களைக் காணவில்லை, 150க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதாக சுகாதார அமைச்சக அதிகாரி தெரிவித்தார்.

இறந்தவர்களின் எண்ணிக்கை 154 ஆகும், இதில் 25 பேர் இதுவரை அடையாளம் காணப்படவில்லை என்று சுகாதார அமைச்சக கூறினார்.

செவ்வாய்க்கிழமை காயமடைந்த 5,000 பேரில் குறைந்தது 120 பேர் ஆபத்தான நிலையில் இருப்பதாக சுகாதார அமைச்சர் தெரிவித்தார்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்