லொறியில் மறைந்த படி ஐரோப்பியாவிற்குள் நுழைய முயன்ற 34 பேர் கைது! எந்த நாட்டைச் சேர்ந்தவர்கள்?

Report Print Basu in ஏனைய நாடுகள்
471Shares

ஐரோப்பியாவிற்குள் நுழைய முயன்ற மத்திய கிழக்கை சேர்ந்த நான்கு பெண்கள் மற்றும் நான்கு குழந்தைகள் உட்பட 34 பேரை போலந்து எல்லைக் காவலர்கள் கைது செய்துள்ளனர்.

துருக்கியில் இருந்து ஸ்லோவாக்கியா வழியாக வந்த லொறியின் டிரெய்லரில் பயணித்த மத்திய கிழக்கைச் சேர்ந்த 34 பேரை போலந்து எல்லைக் காவலர்கள் கைது செய்து காவலில் வைத்துள்ளனர்.

அவர்கள் வெள்ளிக்கிழமை இரவு கைது செய்யப்பட்டு பீல்ஸ்கோ-பியாலாவில் உள்ள எல்லைக் காவல் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என்று போலந்து எல்லைக் காவலர் சேவையின் செய்தித் தொடர்பாளர் சிமோன் மொசிக்கி தெரிவித்தார்.

கைதி செய்யப்பட்டவர்கள் ஈராக், ஈரான், சிரியா மற்றும் துருக்கியைச் சேர்ந்த குர்துகள் குடிமக்கள் என்று கருதப்படுவதாக அவர் கூறினார்.

அவர்கள் எந்த நாட்டிற்கு பயணிக்க இருந்தார்கள் என்பது தெரியவில்லை என குறிப்பிட்டுள்ளார்.

அகதிகளுக்கு புகலிடம் வழங்குவதற்கான நடைமுறைகளை மறுத்து போலந்து சர்வதேச ஒப்பந்தத்தை மீறிவிட்டதாக ஐரோப்பியாவின் மனித உரிமை நீதிமன்றம் தீர்ப்பளித்ததை அடுத்து, போர் மற்றும் துன்புறுத்தலில் இருந்து தப்பி ஓடி வரும் மக்களுக்கு உதவுமாறு கடந்த மாதம் ஐ.நா அகதிகள் அமைப்பு போலந்தை வலியுறுத்தியது.

2016 முதல் வருடாந்திர புகலிடம் கோரி விண்ணப்பிக்கும் நபர்களின் எண்ணிக்கை 8,000-14,000 இருந்து ஆண்டுக்கு 4,000 ஆக குறைந்துள்ளது என போலந்தில் உள்ள ஒரு அரசு சாரா அமைப்பு தெரிவித்துள்ளது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்