பேருந்தில் துப்பாக்கியுடன் நுழைந்த கொள்ளையர்கள்: பயணிகளை அதிரடி முடிவெடுக்கவைத்த அந்த துயர சம்பவம்!

Report Print Balamanuvelan in ஏனைய நாடுகள்
283Shares

மெக்சிகோவில் பேருந்து ஒன்றில் துப்பாக்கியுடன் நுழைந்த கொள்ளையர்கள் இருவர் மக்களை மிரட்டி கொள்ளையடிக்கத் தொடங்கினர்.

சீருடையில் இல்லாத பொலிசார் ஒருவர் அந்த பேருந்தில் பயணித்த நிலையில், சட்டென துப்பாக்கியை எடுத்து அவர்கள் இருவரையும் சுட்டுள்ளார்.

ஆனால், அந்த கொள்ளையர்கள் திருப்பிச் சுட்டதில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்துவிட்டார்.

இதைக் கண்டு ஆத்திரமடைந்த பயணிகள் எழுந்து கொள்ளையர்கள் இருவரையும் சரமாரியாக தாக்கத்தொடங்கினர்.

கொள்ளையர்கள் தப்பிச் செல்ல முயல, பயணிகள் அனைவரும் சேர்ந்து கொள்ளையர்கள் இருவர் மீதும் தங்கள் கோபத்தைக் காட்டியதில் இரண்டு கொள்ளையர்களின் உடல்தான் மிஞ்சியது.

ஆம், அடித்தே கொள்ளையர்களைக் கொன்றுவிட்டனர் பயணிகள்.

சில நாட்களுக்கு முன்பும், மெக்சிகோவில் இதேபோல கொள்ளையன் ஒருவனை பயணிகள் சேர்ந்து அடி பின்னி எடுத்துவிட்டது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்