பெய்ரூட் நகரையே உருக்குலைத்த சம்பவத்திற்கு இதுதான் காரணம்: அம்பலப்படுத்திய ஜனாதிபதி

Report Print Arbin Arbin in ஏனைய நாடுகள்
535Shares

பெய்ரூட் நகரை மொத்தமாக சிதைத்த கோர சம்பவத்திற்கு ராக்கெட் அல்லது வெடிகுண்டு தாக்குதல் தான் காரணமாக இருக்கலாம் என்று லெபனானின் ஜனாதிபதி இன்று ஒப்புக் கொண்டுள்ளார்.

குறைந்தது 154 பேரை பலிவாங்கி ஆயிரக்கணக்கானோர் காயமடைக் காரணமான இந்த பேரழிவு, அதிகார வர்க்கத்தின் ஊழல் மற்றும் திறமையின்மைக்கு எதிராக போராட்டங்களைத் தூண்டியுள்ளது.

இந்த நிலையிலேயே ஜனாதிபதி மைக்கேல் அவுன் முதன் முறையாக அந்த சம்பவம் தொடர்பில் பேசியுள்ளார்.

அதன் உண்மையான காரணம் இன்னும் தீர்மானிக்கப்படவில்லை என கூறிய அவுன், வெளி சக்திகளால் ராக்கெட் அல்லது வெடிகுண்டு அல்லது பிற செயல் மூலம் இந்த கொடூர சம்பவம் நிகழ்த்தப்பட வாய்ப்பும் உள்ளது என்றார்.

இதனிடையே, கவனக்குறைவு தொடர்பான கூற்றுக்களை விசாரித்து வருவதாகவும், சம்பவம் நடந்த வேளையில் இருந்து மூன்று நாட்களில் 16 துறைமுக அதிகாரிகளை கைது செய்துள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

தொடக்கத்தில் வெளியான தகவலின் அடிப்படையில், கிடங்கின் அருகே சேமித்து வைக்கப்பட்ட பட்டாசுகள் அல்லது உடைந்த வாயிலை சரிசெய்ய வெல்டர்களை பயன்படுத்தியதால் இச்சம்பவம் நிகழ்ந்ததாக கூறப்படுகிறது.

ஆனால் அமெரிக்க நிர்வாகம், இதில் வெளி ஆட்களின் தலையீடு இருப்பதாக சந்தேகம் தெரிவித்துள்ளது.

பல ஆண்டுகளாக தவறான நிர்வாகம் மற்றும் ஊழல் பேரழிவிற்கு பரவலாக குற்றச்சாட்டு எழுந்த பின்னர்,

லெபனானின் முடங்கிப்போன அரசியல் அமைப்பு மறுபரிசீலனை செய்யப்பட வேண்டும் என்றும் அவுன் கூறியுள்ளார்.

பெய்ரூட் துறைமுகத்தில் கிடங்கு 12 இல் பாதுகாக்கப்பட்ட அமோனியம் நைட்ரேட் சரக்கு மொசாம்பிக்கிற்கு அதிகாரப்பூர்வமாக அனுப்பப்பட்டிருந்தாலும்,

உள்நோக்கத்துடன் பெய்ரூட்டுக்கு திருப்பி விடப்பட்டிருக்கலாம் என்ற கூற்றும் இன்று பரவலாக விவாதிக்கப்பட்டுள்ளது.

மேலும், பெய்ரூட் துறைமுகமானது ஹிஸ்புல்லா தீவிரவாத குழுக்களின் கண்காணிப்பில் இருப்பதால்,

2005-ல் படுகொலை செய்யப்பட்ட லெபனான் பிரதமரின் மகன், ஹிஸ்புல்லா மீதே தமக்கு சந்தேகம் இருப்பதாக தெரிவித்துள்ளார்.

ஹிஸ்புல்லா பயங்கரவாத குழுக்களுக்கு தெரியாமல் துறைமுகத்தில் இருந்து தூசு கூட நகர முடியாத நிலையில்,

அவர்களுக்கு தெரியாமல் இந்த கொடூர சம்பவம் நிகழ்ந்திருக்க வாய்ப்பில்லை என்கிறார் பஹா ஹரிரி.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்