இது மட்டும் நடந்தால் போதும் வடகொரியா, ஈரானுடன் ஒப்பந்தங்கள்: டிரம்ப்

Report Print Basu in ஏனைய நாடுகள்
5880Shares

அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் எதிர்வரும் நவம்பர் மாதம் 3ம் திகதி நடைபெறவுள்ளது.

இத்தேர்தலில் தற்போதைய அமெரிக்க ஜனாதிபதியும் குடியரசு கட்சி வேட்பாளருமான டொனால்டு டிரம்பிற்கும், முன்னாள் அமெரிக்க துணை ஜனாதிபதியும் ஜனநாயக கட்சி வேட்பாளருமான ஜோ பிடனுக்கும் கடும் போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், ​​ஜனாதிபதி தேர்தலில் தான் வெற்றி பெற்றால் ஈரான் மற்றும் வட கொரியா நாடுகள் அமெரிக்காவுடன் அணு ஆயுதத் திட்டங்கள் குறித்து மிக விரைவாக ஒப்பந்தங்களை மேற்கொள்வார்கள் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கூறினார்.

ஈரான் அணுசக்தி ஒப்பந்தத்திலிருந்து டிரம்ப் விலகிய பின்னர், அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையிலான பதட்டங்கள் மீண்டும் அதிகரித்தன, மேலும் 2018ல் ஈரான் மீது அமெரிக்கா மீண்டும் பொருளாதாரத் தடைகளை விதித்தன.

இந்நிலையில, எதிர்வரும் ஜனாதிபதி தேரத்தலில் நான் வென்றால், ஈரானுடன் மிக விரைவாக ஒப்பந்தங்களை மேற்கொள்வோம், வட கொரியாவுடன் மிக விரைவாக ஒப்பந்தங்களை மேற்கொள்வோம் என்று டிரம்ப் தெரிவித்தார்.

அவரது நிர்வாகம் இல்லாவிட்டால், அமெரிக்கா இப்போது வட கொரியாவுடன் போரில் ஈடுபட்டு கொண்டிருக்கும் என்றும் டிரம்ப் கூறினார்.

கொரிய தீபகற்பத்தை அணுசக்தியற்ற பகுதியாக்குவது குறித்து பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்க ஜனாதிபதியும் வட கொரிய தலைவருமான கிம் ஜாங்-உன் இருவரும் சிங்கப்பூர் மற்றும் வியட்நாமில் என இரண்டு முறை பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

எவ்வாறாயினும், வியட்நாம் தலைநகர் ஹனோயில் நடந்த பேச்சுவார்த்தை முடிவு ஏதும் எட்டாமல் முடிந்தது, வட கொரியா தனது முழு அணு ஆயுதத்தையும் அகற்றும் வரை அந்நாட்டிற்கு விதிக்கப்பட்ட பொருளாதாரத் தடைகளை நீக்க டிரம்ப் மறுத்துவிட்டார்.

ஹனோய் பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததிலிருந்து, இரு நாடுகளுக்கும் இடையிலான கொரிய தீபகற்பத்தை அணுசக்தியற்ற பகுதியாக்குவது பேச்சுவார்த்தைகள் தடைப்பட்டுள்ளன, மேலும் பேச்சுவார்த்தைகளின் போது இடைநிறுத்தப்பட்ட ஏவுகணை சோதனைகளை வடகொரியா மீண்டும் தொடங்கியது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்