வெளிநாட்டுக்கு சென்ற தமிழருக்கு நேர்ந்த கதி! கதறி அழுத மனைவி மற்றும் பிள்ளைகள்.. கண்களை குளமாக்கும் புகைப்படம்

Report Print Raju Raju in ஏனைய நாடுகள்
3367Shares

வெளிநாட்டில் வேலைக்கு சென்ற தமிழர் அங்கு மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார்.

தமிழகத்தில் கடலூர் மாவட்டத்தின் பெரியகோட்டுமுளை கிராமத்தை சேர்ந்தவர் பெரியசாமி (40). இவர் மனைவி அம்சவல்லி (35). இந்த தம்பதிக்கு பிரேம்குமார் (15), பிரதாப் (13) என்ற 2 மகன்களும் அனுஷியா (10) என்ற ஒரு மகளும் உள்ளனர்.

பெரியசாமி குடும்ப வறுமை காரணமாக கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு விசா எடுத்து துபாய்க்கு கட்டிட வேலைக்காக சென்றுள்ளார்.

அங்கிருந்தபடியே தினந்தோறும் தனது மனைவி மற்றும் பிள்ளைகளுடன் செல்போனில் தொடர்புகொண்டு பேசி வந்த இவரின் செல்போன் கடந்த திங்கட்கிழமை முதல் 'சுவிட்ச் ஆஃப்' செய்யப்பட்டு இருந்தது. இதனால் அவரது குடும்பத்தினர் அவர் எந்தச் சூழ்நிலையில் உள்ளார் எனத் தெரியாமல் கவலையில் ஆழ்ந்திருந்தனர்.

இந்த நிலையில் அவருடன் வேலை செய்து வந்த எடச்சித்தூர் கிராமத்தைச் சேர்ந்த ஒருவர் உங்கள் கணவர் தங்கியிருந்த அறையில் உயிரிழந்துள்ளார். அவருடன் வேலை செய்த நண்பர்கள் அவரை வேலைக்காக அழைத்துச் செல்வதற்கு எழுப்பிய போது அவர் உயிரிழந்த நிலையில் பிணமாகக் கிடந்தது தெரிய வந்துள்ளது என்று அலைபேசி மூலம் அம்சவல்லியிடம் கூறியுள்ளார்.

இதனால் அதிர்ச்சியும் வேதனையும் அடைந்த அந்தக் குடும்பத்தினர் செய்வதறியாமல் திகைத்த நிலையில் நேற்று கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தார்.

அந்த மனுவில், எனது கணவர் சாவில் சந்தேகம் இருக்கிறது. அவர் பணியாற்றிய முதலாளியிடம் அலைபேசி செய்து கேட்டால் சரியான பதில் கிடைக்கவில்லை. இதன் மர்மத்தை கண்டுபிடிப்பதோடு அவரின் உடலை விரைவில் கொண்டு வர உதவ வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குடும்பத்திற்காக பிழைப்பு தேடி வெளிநாடு சென்ற பெரியசாமியை நினைத்து அவர் குடும்பத்தார் கதறி அழுத புகைப்படம் வெளியாகி காண்போர் கண்களை குளமாக்கியுள்ளது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்