வன்கொடுமைக்கு இரையானவர்களிடம் மருத்துவ கட்டணமாக இரண்டு மாத ஊதியத்தை வசூலிக்கும் நாடு

Report Print Arbin Arbin in ஏனைய நாடுகள்
68Shares

ஆப்பிரிக்க நாடான கானாவில் துஷ்பிரயோகத்திற்கு இலக்கானவர்கள் புகார் அளிக்க மருத்துவ கட்டணமாக அவர்களின் இரண்டு மாத ஊதியத்தை கட்டணமாக செலுத்தும் அவல நிலை வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

குறித்த கெடுபிடிகளாலையே, பெரும்பாலான துஷ்பிரயோக குற்றங்கள் நீதிமன்றம் செல்லாமல் கைவிடப்படுவதாகவும், அதனாலையே, இதுபோன்ற குற்றங்கள் அதிகரித்து வருவதாகவும் சமூக ஆர்வலர்களால் வெளிச்சத்துக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

பாலியல் பலாத்காரத்துக்கு இலக்கானவர்கள் துணிச்சலுடன் அதை புகாரளிப்பது என்பது யாருக்கும் அதிர்ச்சிகரமான ஒன்றாகும்,

ஆனால் அது தொடர்பான மருத்துவ படிவத்தை பூர்த்தி செய்ய இரண்டு மாத ஊதியம் செலுத்த வேண்டியுள்ளது கானாவில் பலருக்கு நீதி கோருவதைத் தடுக்கிறது என குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார் நடிகையும் சமூக செயற்பாட்டாளருமான Ama K. Abebrese.

மருத்துவ கட்டணங்களை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை அவர் தற்போது கானா ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளார்.

கானாவில் வன்கொடுமைக்கு இலக்கானவர்கள் மருத்துவ சான்று பெறுவதற்கே 40 பவுண்டுகள் கட்டணமாக செலுத்த வேண்டியுள்ளது.

இந்த தொகையானது கானாவில் சராசரி மாத ஊதியத்திற்கு இருமடங்காகும்.

உங்களால் அதை செலுத்த முடியாவிட்டால், பணத்தின் அடிப்படையில் உங்களுக்கு நீதி மறுக்கப்படுவது போலாகும் என்கிறார் K. Abebrese.

கற்பழிப்பு, பாலியல் வன்கொடுமை மற்றும் குடும்ப வன்முறை ஆகியவை கானாவில் கணிசமாக குறைவாகக் குறிப்பிடப்படுகின்றன, மேலும் வழக்குகளை திறம்பட விசாரிக்கும் திறன் காவல்துறைக்கு இல்லை, இது நீதிமன்றத்தை அடைய பல ஆண்டுகள் ஆகலாம் என்கின்றனர் மகளிர் அமைப்புகள்.

மட்டுமின்றி, பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடு பெற்றுத்தருவதாக கூறி சமூகத் தலைவர்கள் சில சமயங்களில் குற்றவாளிகளுக்காக பேச்சுவார்த்தை நடத்துவதும் இந்த விவகாரத்தில் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

பொதுவாக, பொலிசாருக்கு அளிக்க வேண்டிய மருத்துவ படிவத்தை பூர்த்தி செய்ய மருத்துவர் ஒருவருக்கு 40 முதல் 106 பவுண்டுகள் வரை கட்டணமாக செலுத்தவேண்டியுள்ளது.

மேலும், மருத்துவர்கள் சட்ட நோக்கங்களுக்காக தங்கள் கருத்தை வழங்குவதற்காக 133 முதல் 266 பவுண்டுகள் வசூலிக்கப்படுகிறது.

இதனால் அப்பாவி மக்கள் தங்களுக்கு ஏற்பட்ட கொடூரத்திற்கு நீதி கேட்டு நீதிமன்றங்களை நாடுவதில்லை.

ஆனால் இன்னொரு ஆப்பிரிக்க நாடான கென்யாவில் வன்கொடுமைக்கு இலக்கானவர்கள் மொத்தமாக 10 டொலர் மட்டுமே கட்டணமாக செலுத்தி விரிவான மருத்துவ அறிக்கை பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்