ஊழல் புகார்... இரவோடு இரவாக மாயமான முன்னாள் மன்னர்: ஒளிந்திருக்கும் இடம் இதுதான்

Report Print Arbin Arbin in ஏனைய நாடுகள்
61Shares

ஊழல் புகாரில் சிக்கி தலைமறைவான ஸ்பெயின் நாட்டின் முன்னாள் மன்னர் ஜுவான் கார்லோஸ் உலகின் மிக விலையுயர்ந்த ஹொட்டல் ஒன்றில் தங்கியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஸ்பெயினின் பிரபல பத்திரிகை வெளியிட்ட இந்த தகவலில், ஊழல் புகாரில் சிக்கி இரவோடு இரவாக தலைமறைவான முன்னாள் மன்னர் 82 வயது ஜுவான் கார்லோஸ் ஐக்கிய அமீரகத்தின் தலைநகர் அபுதாபியில் ஒளிந்திருப்பதாக அம்பலப்படுத்தியுள்ளது.

உலகின் மிக விலையுயர்ந்த ஹோட்டல்களில் ஒன்றான இந்த Emirates Palace ஹொட்டலில் ஒரு நாள் தங்குவதற்கான கட்டணமாக 10,000 பவுண்டுகள் வசூலிக்கப்படுகிறது.

கடந்த திங்களன்று தாம் ஸ்பெயி நாட்டைவிட்டு வெளியேற இருப்பதாக மகனுக்கு கடிதம் எழுதிய அன்றைய தினம் மாலை நேரம் ஜுவான் கார்லோஸ் Emirates Palace ஹொட்டலின் வருகைப்பதிவேட்டில் கையெழுத்திட்டதாக கூறப்படுகிறது.

மேலும், ஸ்பெயினின் வடமேற்கு எல்லை அருகிலுள்ள விகோவிலிருந்து திங்களன்று தனது நான்கு மெய்க்காப்பாளர்கள் உட்பட ஐந்து பயணிகளுடன் ஒரு தனியார் விமானத்தில் சென்றுள்ளதாக தெரியவந்துள்ளது.

மட்டுமின்றி ஸ்பெயினில் இருந்து அபுதாபி செல்லும் பொதுவான விமான வழித்தடத்தை பயன்படுத்தாமல், செல்வந்தர்கள் பாதுகாப்பு காரணங்களுக்கான பயன்படுத்தும் வழித்தடத்தை மன்னர் சென்ற விமானமும் பயன்படுத்தியதாக கூறப்படுகிறது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்