பெய்ரூட்டில் வெடித்த ரசாயனத்தை கப்பலில் அனுப்பி வைத்து பெருந்தொகை சம்பாதித்த ரஷ்யர்

Report Print Arbin Arbin in ஏனைய நாடுகள்

லெபனான் தலைநகர் பெய்ரூட்டை மொத்தமாக உருக்குலைத்த விபத்துக்கு காரணமான ரசாயனத்தை கப்பலில் அனுப்பி வைக்க ரஷ்ய தொழிலதிபர் பெருந்தொகையை கட்டணமாக பெற்றுள்ளது தெரியவந்துள்ளது.

கடந்த 2013 ஆம் ஆண்டு மொசாம்பிக் பகுதிக்கு டன் கணக்கில் அமோனியம் நைட்ரேட் ரசாயனத்துடன் பயணமான ரோசஸ் என்ற சரக்குக் கப்பல் அதே ஆண்டு செப்டம்பர் மாதம் பெய்ரூட் துறைமுகத்திற்கு வரவழைக்கப்பட்டுள்ளது.

சாலை அமைக்கும் பணிகளுக்கான கருவிகளை அந்த சரக்கு கப்பலில் அனுப்ப திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், அந்த கப்பலுக்கு உரிய ஆவணங்கள் இல்லை என்பது பெய்ரூட் அதிகாரிகளால் கண்டறியப்படவே,

கப்பலையும் அதன் மாலுமி உள்ளிட்ட ஊழியர்களையும் பெய்ரூட் அதிகாரிகள் மொத்தம் 11 மாதங்கள் சிறைபிடித்துள்ளனர்.

இதனிடையே கப்பலின் மாலுமி Boris Prokoschew இந்த விவகாரம் தொடர்பில் ரஷ்ய ஜனாதிபதி புடினுக்கு கடிதம் அனுப்பியும் உரிய பதில் வரவில்லை என்றே கூறப்படுகிறது.

மட்டுமின்றி உரிய காலத்தில் மொசாம்பிக் பகுதிக்கு சென்று சேர வேண்டிய அமோனியம் நைட்ரேட் ஏன் இன்னும் வரவில்லை என்ற புகாரும் எழவில்லை.

இதனிடையே, மிதக்கும் வெடிகுண்டு என குறிப்பிடப்பட்ட இந்த சரக்கு கப்பலை மொசாம்பிக் பகுதிக்கு அனுப்பிவைக்க ரஷ்ய தொழிலதிபரான Igor Grechushkin மொத்தமாக ஒரு மில்லியன் டொலர் கட்டணமாக பெற்றுள்ளார்.

உரிய ஆவணங்கள் இல்லை என்பதால் தடுத்து நிறுத்தப்பட்ட அந்த கப்பலில் இருந்த 2,750 டன் அமோனியம் நைட்ரேட் ரயாயனமும் பெய்ரூட்டில் உள்ள துறைமுகத்துக்கு சொந்தமாக கிடங்கில் உரிய பாதுகாப்பு ஏதுமின்றி இதுநாள் வரை சேமிக்கப்பட்டு வந்துள்ளது.

கடந்த செவ்வாய்க்கிழமை அந்த அமோனியம் நைட்ரேட் மொத்தமாக வெடித்ததில் இதுவரை 149 பேர்கள் கொல்லப்பட்டுள்ளதாகவும், பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

தற்போது அந்த ரசாயனம் மொத்தமும், பாதுகாப்பான பகுதிக்கு மாற்ற ஏன் இந்த 7 ஆண்டுகளில் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என விசாரிக்கப்பட்டு வருகிறது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்