குழந்தைகள், இளைஞர்களை அதிகமாக தாக்கும் கொரோனா..! அம்பலப்படுத்திய WHO

Report Print Basu in ஏனைய நாடுகள்

குழந்தைகள், இளம் வயதினர் மற்றும் இளைஞர்கள் மத்தியில் கொரோனா வழக்குகள் மின்னல் வேகத்தில் உயர்ந்துள்ளன என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

கொரோனா பரவல் தொடங்கிய ஆரம்ப காலத்தில் வைரஸால் வயதானவர்களுக்கு அதிக ஆபத்து இருப்பதாக சுகாதார வல்லுநர்கள் வலியுறுத்தினர்.

ஆனால் உலக சுகாதார அமைப்பின் (WHO) புதிய தரவின் படி, இதுவரை பெரும்பாலான வழக்குள் 25 முதல் 64 வயதுடையவர்களில் பதிவாகியிருக்கிறன என்பதைக் காட்டுகிறது.

இளம் வயதினர் மற்றும் இளைஞர்களிடையே வழக்குகளின் விகிதம் ஆறு மடங்கு அதிகரித்துள்ளது, மிகச் சிறிய குழந்தைகள் மற்றும் குழந்தைகளிடையே வழக்குகளின் விகிதம் ஏழு மடங்கு அதிகரித்துள்ளது என்று WHO தெரிவித்துள்ளது.

பெரியளவில் சோதனை, லேசான அறிகுறிகளுடைய வழக்குகளை அதிகமாகக் கண்டறிதல் மற்றும் மக்கள் தொகை அதிகம் உள்ள பகுதிகளுக்கு நோய்தொற்று பரவியதால் இளையவர்களிடையே வழக்குகள் அதிகரித்திருக்கலாம் என கூறப்படுகிறது.

ஆனால், பொது சுகாதாரம் மற்றும் சமூக நடவடிக்கைகளை தளர்த்திய பின்னர் ஆபத்தான வகையில் அதிகரிப்பதையும் குற்றம் சொல்ல வேண்டும் என்று WHO தெரிவித்துள்ளது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்