கொரோனா தடுப்பூசியை எந்த நாடு கண்டுபிடித்தாலும் கண்டிப்பாக இவ்வாறு செய்ய வேண்டும்! அவுஸ்திரேலிய பிரதமர் வலியுறுத்தல்

Report Print Basu in ஏனைய நாடுகள்

கொரோனா வைரஸை உலகையே அச்சுறுத்தி வரும் நிலையில் அதன் இரண்டாவது அலையை தடுக்க உலக நாடுகள் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன, மறுபுறும் தடுப்பூசி கண்டுபிடிக்கும் பணியும் உலகெங்கிலும் அயராது நடைப்பெற்று வருகிறது.

இந்நிலையில், கொரோனா தடுப்பூசியை எந்த நாடு கண்டுபிடித்தாலும் அதை உலகுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று அவுஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன் வலியுறுத்தியுள்ளார்.

இந்த தடுப்பூசியைக் கண்டுபிடிக்கும் எந்த நாடும், அதை கட்டுப்பாடு இல்லாமல் உலகம் முழுவதும் கிடைக்கச் செய்யாவிட்டால் வரலாற்றால் மோசமாக தீர்மானிக்கப்படும் என மோரிசன் கூறினார்.

அவுஸ்திரேலியா தடுப்பூசியைக் கண்டுபிடித்தால், நாங்கள் அதைப் பகிர்ந்து கொள்வோம் என்றும் மோரிசன் உறுதியளித்தார்.

அவுஸ்திரேலியா தடுப்பூசிகளை உருவாக்கி வழங்குவதற்கும் தயார் நிலையில் இருக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.

அதே சமயம் உலகெங்கிலும் கொரோனா வைரஸ் தடுப்பூசிக்கான அவுஸ்திரேலியாவின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு மின்னல் வேகத்தில் நடக்கிறது என்று நாட்டின் செயல் தலைமை மருத்துவ அதிகாரி பால் கெல்லி கூறினார்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்