கொரோனா உடலில் முக்கிய செயல்பாட்டை நிறுத்தும்.. அதை தடுக்க இது தான் ஒரே வழி! ஆராய்ச்சியாளர்கள் தகவல்

Report Print Basu in ஏனைய நாடுகள்

கொரோனா மனித உடலில் உள்ள முக்கியமான நோயெதிர்ப்பு மண்டல உயிரணுக்களின் செயல்பாட்டை நிறுத்தி, உடல் தொற்றுநோயை எதிர்த்துப் போராடுவதைத் தடுக்கிறது என்றும் ஹொங்ஹொங் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.

ஹொங்ஹொங் பல்கலைக்கழகத்தின் (HKU) குழு, அவர்களின் கண்டுபிடிப்புகளை இதழ் ஒன்றில் வெளியிட்டுள்ளன.

அதில், சில மருந்துகளுடன் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிப்பது நோயாளிகள் சிறப்பாக குணமடைய உதவும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

கொரோனா தொற்றுநோயின் ஆரம்பத்தில் ஹொங்ஹொங்கில் கொரோனா வைரஸுக்கு சிகிச்சையளிக்கப்பட்ட 41 நோயாளிகளின் இரத்தத்தை ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு செய்தனர்.

மேலும் நோயாளிகளின் நோயெதிர்ப்பு செயல்பாட்டை ஆரோக்கியமான தன்னார்வலர்களுடன் ஒப்பிட்டனர்.

கொரோனா நோயாளிகளுக்கு டி-செல்கள் மற்றும் டென்ட்ரிடிக் செல்கள் எனப்படும் நோயெதிர்ப்பு அமைப்பு செல்கள் அனைத்தின் செயல்பாடும் நிறுத்தப்பட்டதாக தோன்றியது.

இந்த செல்கள் அனைத்தும் தொற்றுநோய்க்கு எதிராக போராடும் மனித உடலின் ஒரு பகுதியாகும்.

கொரோனா நோயாளிகளுக்கு ஆரம்பத்திலே நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் மருந்துகளை வழங்குவது உயிரிழப்பைக் குறைக்க முக்கியமானது என்று கண்டுபிடிப்புகள் தெரிவிக்கின்றன என தலைமை வகிக்கும் HKU-ல் தொற்று நோய்கள் துறை தலைவர் யுயென் குவோக்-யுங் தெரிவித்துள்ளார்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்