பெய்ரூட் வெடி விபத்தின்போது கடலில் தூக்கியெறியப்பட்ட நபர்: 30 மணி நேரத்திற்குப்பின் நடந்த அதிசயம்!

Report Print Balamanuvelan in ஏனைய நாடுகள்

பெய்ரூட் வெடி விபத்தில் காணாமல் போனதாக அறிவிக்கப்பட்ட நபர்களில் ஒருவர், 30 மணி நேரத்திற்குப்பின் உயிருடன் கிடைத்துள்ள அதிசயம் நிகழ்ந்துள்ளது.

லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் நிகழ்ந்த வெடி விபத்தின்போது காணாமல் போனதாக அறிவிக்கப்பட்டவர்களில் Amin al-Zahedம் ஒருவர்.

ஆனால், அதிசயிக்கத்தக்க விதமாக, வெடி விபத்து நிகழ்ந்து 30 மணி நேரத்திற்குப் பின் Amin மத்தியதரைக்கடலிலிருந்து உயிருடன் மீட்கப்பட்டுள்ளார்.

வெடிப்பொருட்கள் வெடிக்கும்போது, துறைமுகத்தில் வேலை செய்துகொண்டிருந்த துறைமுகப் பணியாளர்களில் ஒருவரான Amin, வெடி வெடித்த வேகத்தில் கடலுக்குள் தூக்கி வீசப்பட்டுள்ளார்.

அவரைக் காணவில்லை என, இன்ஸ்டாகிராமில் வெளியிடப்பட்ட காணாமல் போனவர்கள் பற்றிய அறிவிப்பு ஒன்றில் புகைப்படத்துடன் அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், Amin என கருதப்படும் ஒருவரை மீட்புக் குழுவினரில் ஒருவர் தாங்கிப்பிடித்திருக்கும் புகைப்படம் ஒன்று சமூக ஊடகம் ஒன்றில் வெளியாகியுள்ளது.

அவர் உடல் முழுவதும் இரத்தமாக காணப்பட்ட நிலையிலும் உயிருடன் இருந்துள்ளார். அவர் Rafic Hariri பல்கலைக்கழக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆனால், அவரது குடும்பத்தினர் அங்கு சென்று தேடியும் அவரைக் கண்டுபிடிக்கமுடியவில்லை என்று தெரிவித்துள்ளனர்.

தற்போது Amin எப்படி இருக்கிறார், அவர் எப்படி 30 மணி நேரம் கடலில் தாக்குப்பிடித்தார் என்பது குறித்த தகவல்கள் இன்னமும் வெளியாகவில்லை.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்