பெய்ரூட் வெடி விபத்தை வீடியோ எடுத்த கணவன்... ஏதோ ஆபத்து என உணர்த்திய மனைவியின் உள்ளுணர்வு: வெளியாகியுள்ள திடுக் தகவல்!

Report Print Balamanuvelan in ஏனைய நாடுகள்

பெய்ரூட் வெடி விபத்து குறித்து எடுக்கப்பட்ட வீடியோக்களிலேயே நெருக்கமான வீடியோவை எடுத்த தம்பதியருக்கு நேர்ந்த கதி குறித்த செய்தி வெளியாகியுள்ளது.

வெடி விபத்தைக் காட்டும் வீடியோக்கள் பல உலா வந்தாலும், அருகிலிருந்து அதை வீடியோ எடுத்தவர் Imad Khalil என்பவர்தான் என்று கருதப்படுகிறது.

ஏதோ விபத்து என்று எண்ணி தம்பதியர் தங்கள் பால்கனியிலிருந்து அந்த வெடி விபத்தை வேடிக்கை பார்க்கும்போது, Imad அதை வீடியோ எடுத்திருக்கிறார்.

ஆனால், ஏதோ விபரீதம் என உணர்ந்த அவரது மனைவி Lena Allamaவோ, தயவு செய்து வீட்டுக்குள் வந்துவிடுங்கள் என கணவரிடம் கெஞ்சியிருக்கிறார்.

ஆனாலும், மனைவி சொல்லைக் கேட்காத Imad தொடர்ந்து வீடியோ எடுக்க, அதற்குப் பிறகுதான் இரண்டாவது முறையாக அணுகுண்டு போல் வெடித்துச் சிதறியிருக்கிறது அந்த வெடி பொருட்கள்.

Imad எடுத்த வீடியோவில், அந்த முதல் வெடி விபத்தைக் கண்டு அதனால் யாருக்கு என்ன ஆனதோ என பதறும் அவரது மனைவி, தொடர்ந்து அவரை வீட்டுக்குள் வந்துவிடுமாறு கெஞ்சுவதை கேட்க முடிகிறது.

ஆனால் மனைவி சொன்னதைக் கேட்காமல் Imad தொடர்ந்து வீடியோ எடுக்க, அதற்குப் பின் பெரிய அளவிலான வெடி வெடிக்க, அந்த வீடியோவிலேயே கணவனும் மனைவியும் வீட்டுக்குள் தூக்கி எறியப்படுவதை உணர முடிகிறது.

தற்போது, Imadம் Lenaவும் காயங்களுடன் மருத்துவமனையில் படுத்திருக்கும் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.

அத்துடன் சமூக ஊடகம் ஒன்றில் Imad வெளியிட்டுள்ள செய்தியில், எங்களுக்கு ஆறுதல் செய்திகள் அனுப்பிய அனைவருக்கும் நன்றி, நானும் Lenaவும் நன்கு உடல் நலம் தேறி வருகிறோம் என்று கூறப்பட்டுள்ளது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்