பொலிசாரின் துன்புறுத்தல்... குற்றத்தை ஒப்புக்கொண்ட நபர்: 27 ஆண்டுகளுக்கு பிறகு தெரியவந்த உண்மை

Report Print Arbin Arbin in ஏனைய நாடுகள்

சீனாவில் கொலை குற்றம் தொடர்பில் 27 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்த நபரை நிரபராதி என நீதிமன்றம் விடுவித்துள்ளது.

பொலிசார் தம்மை கடுமையாக துன்புறுத்தி குற்றத்தை ஒப்புக்கொள்ள வைத்ததாக அவர் தெரிவித்துள்ளார்.

கிழக்கு சீனாவில் 1993 ஆம் ஆண்டு இரு சிறுவர்கள் கொலை செய்யப்பட்டது தொடர்பில் கைதாகி சிறைவாசம் அனுபவித்த ஜாங் யுஹுவான் என்பவரே தற்போது விடுவிக்கப்பட்டுள்ளார்.

ஜியாங்சி மாகாணத்தில் உள்ள சிறையில் 9,778 நாட்கள் சிறைவாசன் அனுபவித்த இவரே சீனாவின் மிக நீண்ட காலம் தவறாக தண்டிக்கப்பட்ட கைதியாக அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இவரது ஒப்புதல் வாக்குமூலத்திற்கும் உண்மையான குற்றத்திற்கும் இடையே சம்பவங்கள் ஏதும் பொருந்தவில்லை என நீதிமன்றத்தில் தற்போது நிரூபிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து போதிய ஆதாரங்கள் ஏதும் இல்லை என காரணம் குறிப்பிட்டு, ஜாங் யுஹுவானை நீதிமன்றம் விடுவித்துள்ளது.

மட்டுமின்றி தவறான குற்றச்சாட்டுக்கு இழப்பீடு பெற அவருக்கு உரிமை உண்டு என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

1993 ஆம் ஆண்டு ஜின்க்சியனில் உள்ள ஒரு கிராம நீர்த்தேக்கத்தில் இரண்டு சிறுவர்களின் சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டது.

ஜாங் அந்த சிறுவர்கள் இருவரின் அண்டை வீட்டார் என்பதால், சந்தேக நபராக அடையாளம் காணப்பட்டு பொலிசாரால் கைது செய்யப்பட்டார்.

தொடர்ந்து 1995 ஆம் ஆண்டு மாவட்ட நீதிமன்றம் அவருக்கு மரண தண்டனை விதித்தது.

ஆனால் அவர் இரண்டு ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்த பின்னர் மரண தண்டனையை நீதிமன்றம் ஆயுள் தண்டனையாக மாற்றியது.

இருப்பினும் பலமுறை ஜாங் மேல்முறையீட்டுக்கு முயன்றும் ஏமாற்றமே மிஞ்சியது. இந்த நிலையில், மார்ச் 2019 இல் உயர்நீதிமன்றம் வழக்கை மீண்டும் விசாரிக்க ஒப்புக்கொண்டது.

தொடர்ந்து ஜூலை மாதம் இந்த வழக்கு தொடர்பில் போதிய ஆதாரங்கள் இல்லை என்பதன் அடிப்படையில் ஜாங்கை விடுவிக்க மாகாண சட்டத்தரணிகள் பரிந்துரைத்தனர்.

ஜான் யுஹுவான் விடுவிக்கப்பட்டாலும், 1993-ல் அந்த சிறுவர்கள் கொல்லப்பட்ட விவகாரத்தில் உண்மையான குற்றவாளி இன்னும் அடையாளம் கானப்படவில்லை.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்