பெய்ரூட் விபத்து: இடிபாடுகளுக்கு நடுவே கையில் குழந்தைகளுடன் நிற்கும் செவிலியர்- உலகை உலுக்கும் ஒற்றை புகைப்படம்

Report Print Fathima Fathima in ஏனைய நாடுகள்

லெபனானின் பெய்ரூட் துறைமுகத்தில் நடந்த கோர விபத்துக்கு இதுவரையில் 135 பேர் பலியாகியுள்ளனர், 5 ஆயிரத்துக்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர்.

துறைமுகப்பகுதியில் பாதுகாப்பாற்ற முறையில் வைக்கப்பட்டிருந்த அமோனியம் நைட்ரேட் வேதிப்பொருளால் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.

கட்டிட இடிபாடுகளுக்குள் மேலும் பலர் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படும் சூழலில், அவர்களை மீட்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

இந்நிலையில் விபத்து நடந்த பகுதிக்கு அருகே அமைந்திருக்கும் மருத்துவமனையில் நர்ஸ் ஒருவர் கையில் மூன்று பச்சிளம் குழந்தைகளுடன் நிற்கும் புகைப்படம் வைரலாகி வருகிறது.

உள்ளூர் புகைப்பட கலைஞரான பிலால் ஜாவிஸ் எடுத்த அந்த புகைப்படம் உலக நாடுகளையே உலுக்கியுள்ளது.

மருத்துவமனையின் 80 சதவிகிதம் முழுமையாக சேதமடைந்திருக்கும் நிலையில், ஒரு கையில் போன், மற்றொரு கையில் குழந்தைகளுடன் அவசர உதவிக்காக அழைத்துக் கொண்டிருக்கிறார் அந்த செவிலியர்.

பக்கத்தில் பலரும் ரத்தக்காயங்களுடன் கிடக்க மன உறுதியுடன் நிற்கும் அவ்வீரப் பெண்ணுக்கு உலகம் முழுவதிலுமிருந்து பாராட்டுகள் குவிந்து வருகிறது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்