30 ஆண்டுகளுக்கு முன் ஒன்றாக படித்த பள்ளி நண்பர்கள்... 13 பேர் உயிரைப் பறித்த சுற்றுலா பேருந்து

Report Print Arbin Arbin in ஏனைய நாடுகள்
487Shares

வியட்நாமில் 30 ஆண்டுகளுக்கு முன்னர் பாடசாலையில் ஒன்றாக படித்த நண்பர்கள் சுற்றுலா சென்ற பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த விபத்தில் 13 பேர் மரணமடைந்ததுடன் பலர் காயங்களுடன் தப்பியுள்ளனர்.

வியட்நாம் நாட்டின் குவாங் பிங்ஹ் மாகாணத்தில் டாங் ஹூ உயர்நிலைப்பள்ளியில் 1990 ஆம் ஆண்டு பயின்ற ஒரே வகுப்பை சேர்ந்த 40 மாணவர்கள் தங்கள் பள்ளிவகுப்புகளின் 30 ஆவது ஆண்டுவிழாவை கொண்டாட திட்டமிட்டனர்.

இதற்காக தற்போது வெவ்வேறு துறைகளில் வேலைசெய்துவந்த நண்பர்கள் அனைவரும் ரியூனியன் எனப்படும் மீண்டும் சந்தித்து ஒரு சுற்றுலா பயணம் மேற்கொள்ள முடிவு செய்தனர்.

இதையடுத்து, பள்ளி நண்பர்கள் அனைவரும் ஒரு பேருந்தில் குவாங் மாகாணத்திற்கு சுற்றுலா பயணம் மேற்கொண்டனர்.

குவாங் மாகணத்தில் உள்ள அஸ்ப்ஹெட் சாலையின் செங்குத்து மலைப்பகுதியில் பேருந்து சென்றுகொண்டிருந்தபோது சாரதியின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளனது.

இந்த விபத்தில் பேருந்தில் பயணம் செய்தவர்களில் 13 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

பலர் படுகாயமடைந்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற மீட்புப்படையினர் காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

30 ஆண்டுகளுக்கு முன்னர் ஒன்றாக படித்த பள்ளி நண்பர்கள் ஏற்பாடு செய்து சென்ற சுற்றுலாவில் விபத்து ஏற்பட்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்