முடிவுக்கு வந்த பேச்சுவார்த்தை... பெரும் தொகை வழங்க ஐரோப்பிய ஒன்றியத் தலைவர்கள் ஒப்புதல்

Report Print Basu in ஏனைய நாடுகள்
1284Shares

நான்கு நாள் பேச்சுவார்த்தைக்கு பின்னர் ஐரோப்பிய ஒன்றியத் தலைவர்கள் கொரோனாவுக்கு பிந்தைய பொருளாதார மீட்புக்கு பெரும் தொகையை வழங்க ஒப்புதல் அளித்துள்ளளனர்.

தொற்றுநோயின் பொருளாதார தாக்கத்தை எதிர்கொள்ள 27 நாடுகளின் தொகுதி 750 பில்லியன் யூரோ (677 பில்லியன் பவுண்ட், 859 பில்லியன் டொலர்) மானியங்கள் மற்றும் கடன்களாக வழங்க ஒப்புக்கொண்டனர்.

இந்த ஒப்பந்தம் குறித்த விவரங்கள் இன்னும் பொதுவெளியில் வெளியிடப்படவில்லை என்றாலும் இது ஒரு ‘வரலாற்று சிறப்புமிக்க நாள்’ என்று பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் கூறினார்.

பேச்சுவார்த்தைகள் பிரஸ்ஸல்ஸில் நான்காவது நாள் இரவு வரை நீடித்தன ,பேச்சுவார்த்தை ஆரம்பத்தில் இரண்டு நாட்கள் மட்டுமே நீடிக்க திட்டமிடப்பட்டது.

பேச்சுவார்த்தையில் கொரோனாவால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கும், மீட்பு திட்டத்தின் செலவுகள் குறித்து அக்கறை கொண்டவர்களுக்கும் இடையே உறுப்பு நாடுகள் பெரும்பாலும் பிரிந்து காணப்பட்டன.

ஐரோப்பிய ஒன்றிய கவுன்சில் தலைவர் சார்லஸ் மைக்கேல் ஒரு புதிய திட்டத்தை முன்வைத்த பின்னர் இந்த திருப்புமுனை ஏற்பட்டது, அது கடன்களுக்கு மாறாக மானியங்களாக கிடைக்கும் பணத்தின் அளவைக் குறைக்கிறது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்