இளவரசி ஜாஸ்மின் தமக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதாக அறிவிப்பு

Report Print Arbin Arbin in ஏனைய நாடுகள்
118Shares

மொனாக்கோவின் இளவரசர் இரண்டாம் ஆல்பர்ட்டின் மகள் ஜாஸ்மின் கிரிமால்டி, தமக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளார்.

தற்போது அமெரிக்காவின் கலிபோர்னியாவில் வசித்துவரும் 28 வயதான இளவரசி ஜாஸ்மின், ஒரு உணர்ச்சிபூர்வமான இன்ஸ்டாகிராம் பதிவில் குறித்த தகவலை வெளிப்படுத்தியுள்ளார்.

அதில்,

நான் இன்று சில தகவல்களுடன் வந்துள்ளேன். கொரோனா பரிசோதனைக்கு நான் உட்படுத்தப்பட்ட மருத்துவமனையில் இருந்து இன்று காலை என்னை அழைத்தார்கள்... எனக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது என குறிப்பிட்டுள்ளார்.

பயிற்சி பெற்ற ஓபரா பாடகியான இளவரசி ஜாஸ்மின் கிரிமால்டி, மொனாக்கோவின் இளவரசர் இரண்டாம் ஆல்பர்ட்டின் மகள் என்றாலும் அந்த வகையில் ஊடக வெளிச்சம் பெற விரும்பாதவர் என கூறப்படுகிறது.

நான்கு மாதங்களுக்கு முன்னர் இளவரசர் ஆல்பர்ட் லண்டனில் இளவரசர் சார்லஸ் மற்றும் முக்கிய நபர்களுடனான சந்திப்புக்கு பின்னர் மார்ச் மாதம் தமக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதாக அறிவித்தார்.

அதே மாதம் இளவரசர் சார்லஸ் தமக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதாக அறிவித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்