இறந்த தாயின் சடலத்தை ஜன்னல் வழியே எட்டிப் பார்த்த இளைஞன்! என்ன காரணம்? கண்கலங்க வைத்த புகைப்படம்

Report Print Santhan in ஏனைய நாடுகள்
499Shares

பாலஸ்தீனத்தில் இறந்த தாயின் உடலை மகன் ஜன்னல் வழியாக பார்க்கும் புகைப்படம் வெளியாகி, இணையவாசிகள் பலரையும் கண்கலங்க வைத்துள்ளது.

பாலஸ்தீனத்தில், 73 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் கொரனோவால் பாதிக்கப்பட்டு சமீபத்தில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

அவர் சிகிச்சை பெற்று வரும் மருத்துவமனைக்கு வந்த அவரது மகன் ஜிகாத் என்பவருக்கு மருத்துவமனைக்குள் செல்ல அனுமதி கிடைக்கவில்லை.

இதனை அடுத்து மருத்துவமனை வளாகத்தில் உள்ள ஒரு கட்டடத்தின் ஜன்னலின் மேல் ஏறி உட்கார்ந்து கொண்டு தனது தாயாரை அந்த ஜன்னல் வழியாக கடந்த சில நாள்களாக பார்த்து வந்தார்.

இந்நிலையில் திடீரென தனது தாயார் இறந்து விட்டதாக செய்தி அறிந்து கதறி அழுதார்.

இருப்பினும் கொரனோவால் இறந்த தாயின் உடலைக்கூட பார்க்கவும் அவருக்கு அனுமதி அளிக்கப்படவில்லை.

தாயாரை ஜிகாத் அருகில் இருந்து பார்த்தால் அவருக்கும் கொரோனா பரவும் என்ற அச்சத்தால் அவருக்கு அனுமதி அளிக்காததால் வேதனையடைந்த ஜிகாத், மீண்டும் ஜன்னல் மேல் ஏறி உட்கார்ந்து தனது தாயின் உடலை பார்த்து கதறி அழுதார்.

பெற்ற தாயின் இறந்த உடலைக்கூட பார்க்க முடியாத அளவுக்கு கொரோனா வைரஸ் கோரத்தாண்டவம் ஆடி வருகிறது என இணையவாசிகள் பலரும் கமெண்ட் செய்து வருகின்றனர்.


மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்