மலையேற்றத்துக்கு சென்ற இளம்பெண்கள்... பின்னால் திரும்பிப் பார்த்தபோது: ஒரு திகில் வீடியோ!

Report Print Balamanuvelan in ஏனைய நாடுகள்
1648Shares

மெக்சிகோவில் மலையேற்றத்துக்கு சென்ற இளம்பெண்கள் சிலர் தங்கள் பின்னால் கரடி ஒன்று நிற்பதைக் கண்டு திகிலடைந்தனர்.

ஓடினால் கரடி தாக்கிவிடும் என்பதற்காக அந்த பெண்கள் அமைதியாக நிற்க, அந்த கரடி இரண்டு காலில் எழுந்து நின்று ஒரு பெண்ணின் தலைமுடியை மோப்பம் பிடிப்பதை வெளியாகியுள்ள வீடியோ ஒன்றில் காணலாம்.

கரடி பின்னால் நிற்கிறது, அது என்ன செய்யும் எப்போது தாக்கும் என்பது தெரியாது.

அப்படி இருந்தும், அசட்டு தைரியத்தில் ஒரு பெண் கரடியுடன் தன்னை ஒரு செல்பி எடுப்பதையும் அந்த வீடியோவில் காணமுடிகிறது.

கொஞ்ச நேரம் அந்த பெண்ணை மோப்பம் பிடித்த அந்த கரடி, பின்னர் அவர் அசைய, அவரை லேசாக சீண்டிவிட்டி ஒரு முறை முறைத்து விட்டு அங்கிருந்து நகர்கிறது.

இதுதான் சந்தர்ப்பம் என அந்த பெண் ஓட்டம் எடுப்பதையும் அந்த வீடியோவில் காணலாம்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்