கொரோனா மருந்தை வாங்கி குவித்த கோடீஸ்வரர்கள்! கடும் கொந்தளிப்பில் மக்கள்: எந்த நாட்டில் தெரியுமா?

Report Print Santhan in ஏனைய நாடுகள்
2709Shares

கொரோனாவிற்கு எதிரான தடுப்பு மருந்தை ரஷ்யா உருவாக்கி இருப்பதாக செய்தி வெளியான நிலையில், அந்த மருந்தை நாட்டின் கோடீஸ்வரர்கள் வாங்கி குவித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனாவிற்கு தடுப்பு மருந்தை கண்டுபிடிப்பதற்கு பிரித்தானியா, பிரான்ஸ், ஜேரமனி, இந்தியா, ரஷ்யா போன்ற பல நாடுகள் முயற்சி செய்து வருகின்றன.

ஒரு சில நாடுகளில் இந்த மருந்துக்கான முதல் பரிசோதனை வெற்றிகரமாக முடிந்துவிட்டதாக கூறப்பட்டது.

ஆனால், ரஷ்யாவை சேர்ந்த செச்செநோவ் பகுதியில் இருக்கும் மாஸ்கோ ஸ்டேட் மெடிக்கல் யுனிவர்சிட்டி கொரோனாவிற்கு எதிரான தடுப்பு மருந்தை உருவாக்கி உள்ளது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஏனெனில் மனிதர்கள் மீதான கொரோனாவிற்கான தடுப்பு மருந்தை இரண்டாம் கட்டமாக சோதனை செய்துவிட்டதாக இது அறிவித்துள்ளது. ரஷ்யாவின் கமாலேயா தேசிய மைக்ரோபயாலஜி ஆராய்ச்சி மையம் உடன் இணைந்து இந்த ஆராய்ச்சியை செய்து இருப்பதாக அந்த பல்கலைக்கழகம் குறிப்பிட்டுள்ளது.

ஜூன் 18-ஆம் திகதி 18 பேர் மீதும், ஜூன் 23-ஆம் திகதி 20 பேர் மீதும் இந்த தடுப்பு மருந்தை சோதனை செய்யப்பட்டுள்ளது.

இந்த சோதனை வெற்றி பெற்றதை தொடர்ந்து, வரும் ஆகஸ்ட் 3-ஆம் திகதி இதற்கான மூன்றாம் கட்ட சோதனை செய்யப்படவுள்ளது.

ரஷ்யாவின் கொரோனா தடுப்பு மருந்து அடுத்த மாதம் அமலுக்கு வரும். இதை மக்கள் பயன்பாட்டிற்கு இன்னும் 2 அல்லது மூன்று வாரங்களில் கொண்டு வருவோம், என்று ரஷ்யா கூறியுள்ளது .

இந்நிலையில் இந்த கொரோனா தடுப்பு மருந்தை இப்போதே, அந்நாட்டு கோடீஸ்வரர்கள் வாங்க முயற்சித்து வருகின்றனர்.

குறிப்பாக, அந்நாட்டு அரசியலை கட்டுப்படுத்தி வரும் கோடீஸ்வரர்கள் மற்றும் அரசியல் தலைவர்களுக்குதான் இந்த மருந்தை கொடுக்க இருப்பதாகவும், இவர்களுக்கு மருந்தை கொடுத்தது போகவே மற்றவர்களுக்கு மருந்தை கொடுக்க இருப்பதாக அங்கிருக்கும் உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதில் சில கோடீஸ்வரர்களுக்கு ஏற்கனவே இந்த கொரோனா தடுப்பு மருந்தை கொடுத்துவிட்டதாகவும், அந்நாட்டு அரசுக்கு நிதி உதவியை வழங்கும் யுனைட்டட் கோ ரூசல் போன்ற நிறுவனங்களுக்கு இந்த மருந்து வழங்கப்பட்டு உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதற்காக பல கோடிகள் இறக்கப்பட்டுள்ளது. தற்போது வரை உருவாக்கப்பட்ட அனைத்து மருந்துகளும் வாங்கப்பட்டுவிட்டதாகவும், இதில் மிகப் பெரிய கார்ப்பிரேட் லாபி இருப்பதாக செய்தி வெளியிட்டுள்ளன.

இதை அந்நாட்டு கோடீஸ்வரர்கள், மிகவும் அமைதியாக, ரகசியாக செய்து வருவதால், இதைப் பற்றி தெரிந்த மக்கள் கடும் கோபத்தில் உள்ளனர்.மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்