திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் இனிப்பு சாப்பிட்ட மணப்பெண்! அடுத்த சில நிமிடங்களில் நடந்த கண்ணீர் சம்பவம்

Report Print Raju Raju in ஏனைய நாடுகள்
574Shares

ரஷ்யாவில் திருமண கோலத்தில் இருந்த மணப்பெண் உணவு ஒவ்வாமையால் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Alexandra Erokhova என்ற 25 வயது பெண்ணுக்கும், இளைஞர் ஒருவருக்கும் சில தினங்களுக்கு முன்னர் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது.

அப்போது உணவு வகைகளில் இருந்த இனிப்புகளை Alexandra Erokhova சாப்பிட்டார்.

அப்போது திடீரென அவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது.

இதை பார்த்து அதிர்ச்சியடைந்த உறவினர்கள் ஆம்புலன்ஸுக்கு போன் செய்தனர், மருத்துவ குழுவினர் வந்து மணப்பெண் Alexandra Erokhova-க்கு சிகிச்சை அளித்தும் அவர் பலனின்றி உயிரிழந்தார்.

மருத்துவர்கள் கூறுகையில், anaphylactic shock எனப்படும் ஒவ்வாமை கோளாறால் தான் Alexandra உயிரிழந்துள்ளார்.

அவர் சாப்பிட்ட உணவில் nut சேர்க்கப்பட்டிருந்தது, சிறுவயதில் இருந்தே அது அவருக்கு அலர்ஜி ஆகும், சமையல் செய்பவர்களிடம் இது குறித்து முன்னரே கூறியும் அவர்கள் nut-ஐ உணவில் சேர்த்துள்ளனர் என குடும்பத்தார் கூறியுள்ளனர்.

சம்பவம் தொடர்பாக பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்