கொரோனா தடுப்பு மருந்து விபரங்களை திருட முயலும் முக்கிய நாடு? குற்றச்சாட்டுக்கு அளிக்கப்பட்ட விளக்கம்

Report Print Raju Raju in ஏனைய நாடுகள்
116Shares

கொரோனா தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள அமைப்புகளின் ஆய்வு விவரங்களை நாங்கள் திருடவில்லை என ரஷ்யா தெரிவித்துள்ளது.

கொரோனா தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள அமைப்புகளின் மின்னணு தகவல் சேமிப்பகங்களில் இணையதளம் மூலம் ஊடுருவி, அந்த ஆய்வு விவரங்களை ரஷ்யா திருட முயல்வதாகக் குற்றச்சாட்டு எழுந்தது

இது தொடர்பாக பிரித்தானியாவுக்கான ரஷ்ய தூதர் ஆண்ட்ரெய் கெலின் அளித்த பேட்டியில், தடுப்பு மருந்து ஆய்வில் ஈடுபட்டுள்ள அமைப்புகளிடமிருந்து, அந்த ஆய்வு விவரங்களை இணையதளம் மூலம் ஊடுருவித் திருட ரஷ்யா முயல்வதாக வெளியானது வெறும் கட்டுக்கதையாகும்.

அந்தத் தகவலுக்கு எந்த முகாந்திரமும் இல்லை.இணையதள ஊடுருவலில் ஈடுபட்ட ஏபிடி29 என்ற குழுவினா் குறித்து எங்களுக்கு எதுவும் தெரியாது.

அப்படி ஒரு குழு இருப்பதே பிரித்தானியா ஊடகங்கள் வாயிலாகத்தான் எங்களுக்குத் தெரிய வந்துள்ளது.இந்த காலக்கட்டத்தில், யாா் வேண்டுமானாலும், எங்கிருந்து வேண்டுமானாலும் இணையதளம் மூலம் ஊடுருவி மின்னணு தகவல்களைத் திருட முடியும். எனவே, ஒரு குறிப்பிட்ட இணையதள ஊடுருவல் குழுவை ஒரு குறிப்பிட்ட நாட்டுடன் இணைத்துப் பேசுவது மிகவும் தவறானதாகும் என கூறியுள்ளார்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்