ஸ்தம்பிக்க வைக்கும் கொரோனா பெருந்தொற்று... தடுப்பு மருந்து முதலில் யாருக்கு கிடைக்கும்: வெளியான தகவல்

Report Print Arbin Arbin in ஏனைய நாடுகள்
338Shares

உலக நாடுகளில் பல ஆயிரக்கணக்கான மக்கள் கொரோனாவால் பாதிப்புக்கு உள்ளாகி தடுப்பு மருந்துக்காக காத்திருக்கும் நிலையில், முதலில் அந்த மருந்து யாருக்கு கிடைக்கலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

கொரோனா பெருந்தொற்றை எதிர்கொள்ள முழுமையான தடுப்பு மருந்து நடைமுறைக்கு வரும் என ஆராய்ச்சியாளர்கள் கூறினாலும், அதற்கான கால அளவு எவ்வளவு என்பதை யாராலும் நிர்ணயிக்க முடியவில்லை.

உலகின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த சுமார் 200 குழுக்கள் கொரோனா தடுப்பு மருந்து ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகின்றன.

அதில் 18 குழுக்கள் தடுப்பு மருந்துகளை விலங்குகளின் மீதும், மனிதர்களின் மீதும் சோதிக்க தொடங்கிவிட்டன.

சீனாவில் கண்டுபிடிக்கப்பட்ட தடுப்பு மருந்தானது ராணுவ வீரர்களுக்கு அளிக்கப்பட்டு, அடுத்தகட்ட பரிசோதனை மேற்கொள்ளப்பட உள்ளது.

லண்டனிலுள்ள இம்பீரியல் கல்லூரி உருவாக்கிய தடுப்பு மருந்து விலங்குகளிடம் நல்ல பலனை அளித்ததை தொடர்ந்து, 300 தன்னார்வலர்கள் மீது இந்த தடுப்பு மருந்து செலுத்தப்பட்டு பரிசோதிக்கப்பட்டு வருகிறது.

பொதுவாக தடுப்பு மருந்துகளை உருவாக்க பால ஆண்டுகள் செலவிடப்படும் என்ற நிலையில், பேரழிவை ஏற்படுத்தும் கொரோனாவால் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு ஆராய்ச்சிகளும், பரிசோதனைகளும் முடுக்கி விடப்பட்டுள்ளன.

எனவே அடுத்த ஆண்டின் மத்தியில் தடுப்பு மருந்து பயன்பாட்டுக்கு வர வாய்ப்புகள் அதிகம் என பெரும்பாலான விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.

மேலும், தடுப்பு மருந்து உருவாக்கப்பட்ட ஆரம்ப காலத்தில், அதன் உற்பத்தி அளவு குறைவாகவே இருக்கும். எனவே முன்னுரிமை பட்டியல் ஒன்று உருவாக்கப்படலாம் என கூறப்படுகிறது.

குறிப்பாக மருத்துவமனைகளில் பணியாற்றும் சுகாதார பணியாளர்கள் இந்த பட்டியலில் முதலில் இருப்பார்கள்.

கொரோனா பெருந்தொற்றால் அதிகம் பாதிக்கப்படுவது வயதானவர்கள் என்பதால் அவர்களுக்கு இரண்டாம் இடம் அளிக்கப்படலாம்.

ஆனால் அமெரிக்கா, ரஷ்யா, பிரேசில், இந்தியா உள்ளிட்ட உலகின் பெரும்பாலான நாடுகளில் கொரோனா கோர தாண்டவம் ஆடிவருவதால், தடுப்பு மருந்தின் உற்பத்தி அளவையும் கருத்தில் கொண்டு ஏழைகளின் பயன்பாட்டிற்கு வர கால தாமதமாகலாம் என்ற அச்சமும் சமூக ஆர்வலர்களால் முன்வைக்கப்படுகிறது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்