இந்தியாவுடனான மோதலில் உயிரிழந்த சீனா இராணுவ வீரர்களின் உடல்களை? அமெரிக்க ஊடகங்கள் திடுக்கிடும் தகவல்

Report Print Santhan in ஏனைய நாடுகள்
3910Shares

இந்திய இராணுவ வீரர்களுடன் ஏற்பட்ட மோதலின் போது, சீன ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதை சீனா மறைத்து வரும் நிலையில், உயிரிழந்த வீரர்களை அரசு மரியாதையுடன் அடக்கம் செய்ய சீனா அனுமதிக்கவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த ஜூன் மாதம் 15-ஆம் திகதி கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் உள்ள எல்லையில், இந்திய இராணுவம் மற்றும் சீன இராணுவம் இடையே ஏற்பட்ட மோதலில், 20 இந்திய இராணுவ வீரர்கள் உயிரிழந்திருந்ததாக, இந்திய அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

ஆனால் அதை அதை விட அதிகமாக சீனா நாட்டை சேர்ந்த இராணுவ வீரர்கள் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியானது.

அதற்கு ஏற்ற வகையில் அமெரிக்க உளவுத்துறையும், சீனா இராணுவத்தை சேர்ந்த சுமார் 35-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கலாம் என்று கூறியிருந்தது.

ஆனால், தற்போது வரை சீனா இதுவரை எத்தனை இராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளனர் என்பது குறித்து பேசவேயில்லை. சம்பவம் நடைபெற்று ஒரு மாதம் கடந்து விட்ட நிலையிலும் கூட, சீனா மெளனம் காத்து வருகிறது.

இந்நிலையில், அமெரிக்காவை சேர்ந்த சில ஊடகங்கள் சீன இராணுவத்துக்கு நேர்ந்த பாதிப்பு தொடர்பாக செய்தி வெளியிட்டு உள்ளன.

அதில் உயிரிழந்த சீன இராணுவ வீரர்களின் உடல்களை அவர்களின் முறைப்படி அடக்கம் செய்ய வேண்டாம் என்று இராணுவ வீரர்கள் குடும்பத்தை சீன அரசு கேட்டுக் கொண்டிருப்பதாக குறிப்பிட்டுள்ளன.

இராணுவ மரியாதை எதுவும் இல்லாமல், தொலை தூரத்தில் ஒரு இடத்தில் வைத்து தனித்தனியாக அவர்கள் உடல்களை அடக்கம் செய்யுமாறு அந்த நாட்டு அரசு இராணுவ வீரர்கள் குடும்பத்தினரை கேட்டுக் கொண்டிருப்பதாக கூறி(அமெரிக்க உளவுத்துறை குறிப்பிடுவதாக) சில ஊடகங்களில் செய்திகள் வெளியாகி உள்ளன.

இதை யூஎஸ் நியூஸ் என்ற செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது.

கொரோனா வைரஸ் பாதிப்பை காரணமாக வைத்து உடல்களை அடக்கம் செய்யுமாறு இராணுவ வீரர்கள் குடும்பத்திற்கு சீன அரசு கேட்டுக்கொண்டுள்ளது.

ஆனால் உண்மையான காரணம் என்னவென்றால், இந்தியாவுடன் ஏற்பட்ட மோதலில் எத்தனை பேர் கொல்லப்பட்டனர் என்ற தகவலை உலகத்திற்கு தெரிவித்து விடக்கூடாது என்பதற்காக சீனா இப்படி செய்வதாக கூறப்படுகிறது.

இது இராணுவ வீரர்களின் குடும்பத்தினருக்கு மிகுந்த மன உளைச்சலை ஏற்படுத்தி உள்ளது என்று, அமெரிக்காவை சேர்ந்த ப்ரீட்பார்ட் நியூஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்