மீண்டும் ஒரு அதிர்ச்சி... கருப்பின பெண்ணின் கழுத்தில் ஏறி நின்ற பொலிசார்! கமெராவில் சிக்கிய காட்சி

Report Print Santhan in ஏனைய நாடுகள்
1975Shares

அமெரிக்காவில் ஜார்ஜ் ப்ளாய்ட் என்ற கருப்பினத்தவர் பொலிசார் ஒருவரால் கழுத்தில் மிதிக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் உலுக்கிய நிலையில், தற்போது பிரேசிலில் பொலிசார் ஒருவர் கருப்பின பெண்ணின் கழுத்தின் மீது ஏறி நின்ற வீடியோ வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிரேசிலின் சவோ பவுளோ பகுதியில் 51 வயது பெண்ணின் நண்பருக்கும், பொலிசாருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

அப்போது ஆப்பிரிக்க வம்வாவளியைச் சேர்ந்த பிரேசிலிய பெண், பொலிசாருடன் வாக்குவாதம் செய்திருந்தார்.

இதனால் கோபம் அடைந்த அந்த காவல் அதிகாரி, பெண்ணின் கழுத்தின் மீது ஏறி நின்றுள்ளார். இது தொடர்பான வீடியோ சமூகவலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.

அந்த வீடியோவில், காவல்துறை அதிகாரி ஒருவர் தன் துப்பாக்கியால் ஒருவரை குறி வைக்கிறார். விலங்கிடப்பட்டநிலையில் இருந்த அந்த நபரை பொலிசார் கீழே தள்ளிவிட்டுள்ளனர்.

பின்னர், அவருடன் இருந்த 51 வயதான பெண்ணையும் கீழே தள்ளி அவருடைய கழுத்துப் பகுதியில் மீது தனது பூட்ஸ் காலுடன் ஏறி அந்த அதிகாரி நிற்கிறார்.

பின்னர், அவருடன் இருந்த நபரை பொலிசார் கைது செய்து இழுத்துச் செல்கின்றனர்.

இது குறித்து, பாதிக்கப்பட்ட பெண் கூறுகையில், நான் என்னை கழுத்தில் மிதித்த தருணத்தில் மிகவும் கஷ்டப்பட்டேன். அவ்வளவு அதிகமாக எனது கழுத்தை அவர் இறுக்கினார் என்று வேதனையுடன் கூறியுள்ளார்.

தற்போது அந்த பெண் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக அங்கிருக்கும் உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

மேலும், சாவோ பவுலோவின் ஆளுநர் டோரியா செய்தியாளர்களிடம் கூறுகையில், பொலிசாரின் நடவடிக்கைகள் அதிர்ச்சி அளித்தன.

எந்த பாதுகாப்பு துறை அதிகாரிகளும் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவதை பொறுத்துக்கொள் முடியாது. இந்த செயலில் ஈடுபட்ட அதிகாரிகள் இருவரை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

அதோடு, இரண்டு பொலிசார் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் கருப்பினத்தவர் ஜார்ஜ் ப்ளாய்ட் பொலிசார் ஒருவரால் கழுத்தில் மிதிக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவமே இன்னும் மக்கள் மனதில் நீங்காமல் இருக்கும், நிலையில் பொலிசாரின் இந்த செயல் மீண்டும் ஒரு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்