அமெரிக்காவின் மத்திய புலனாய்வு அமைப்பான சிஐஏ-வுக்கு ஈரானின் திட்டம் குறித்து தகவல்களை விற்றதாக குற்றம் சாட்டப்பட்ட அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சகத்தின் முன்னாள் ஊழியருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.
சிஐஏவுடன் தொடர்புடைய ஈரானிய முகவரை கடந்த புதன்க்கிழமை தூக்கிலிட்டதாக ஈரானின் நீதித்துறை தரப்பில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
ஈரான் பாதுகாப்பு அமைச்சகத்தின் முன்னாள் ஊழியரான ரெசா அஸ்காரி, 2016-ல் ஓய்வு பெற்ற பின்னர் ஈரானின் ஏவுகணைத் திட்டம் குறித்த தகவல்களை சிஐஏவுக்கு விற்றதாகக் கூறப்பட்டதை அடுத்து தூக்கிலிடப்பட்டார் என்று ஈரான் நீதித்துறை செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.
