தொண்டைக்குள் நெளிந்து கொண்டிருந்த புழு: இளம்பெண்ணை பரிசோதித்த மருத்துவர்களுக்கு பேரதிர்ச்சி

Report Print Fathima Fathima in ஏனைய நாடுகள்
870Shares

ஜப்பானில் இளம்பெண்ணில் தொண்டையில் நெளிந்து கொண்டிருந்த புழுவை மருத்துவர்கள் பத்திரமாக அகற்றியுள்ளனர்.

ஜப்பானின் டோக்கியோவை சேர்ந்த 25 வயது மதிக்கத்தக்க இளம்பெண் ஒருவர் புகழ்பெற்ற உணவான சஷிமி உணவை உட்கொண்டுள்ளார், அதாவது சமைக்காத மீன் சோயா சாஸீடன் பரிமாறப்படும்.

அந்த பெண்ணின் துரதிஷ்டமோ என்னமோ, அந்த மீனில் சூடோடெரானோவா அஸராசி என்ற விலங்கியல் பெயரால் அழைக்கப்படும் ஒட்டுண்ணி புழு இருந்துள்ளது.

இதை கவனிக்காமல் அவரும் சாப்பிட்டு வட சில நாட்களிலேயே கடுமையான தொண்டை வலி இருந்துள்ளது.

உடனடியாக மருத்துவரிடம் சென்ற போது, அப்பெண்ணை சோதித்து பார்த்த மருத்துவர்கள் புழு இருப்பதை கண்டறிந்தனர்.

அதாவது தொண்டையின் டான்சில் பகுதியில் சுமார் 3.8 செமீ அளவில் இருந்துள்ளது, இதனையடுத்து மருத்துவர்கள் அப்புழுவை அகற்றினர்.

எனவே தான் அசைவ உணவுகளை நன்றாக சமைத்து சாப்பிட வேண்டும் என மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்