விமான கழிவறைக் கதவில் எழுதப்பட்டிருந்த திடுக்கிடவைத்த செய்தி... அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்!

Report Print Balamanuvelan in ஏனைய நாடுகள்
1460Shares

போலந்து நாட்டிலிருந்து அயர்லாந்து நோக்கி சென்றுகொண்டிருந்த விமானம் ஒன்றின் கழிவறைக் கதவில் எழுதப்பட்டிருந்த ஒரு செய்தி விமான ஊழியர்களை திடுக்கிட வைத்தது.

விமானத்தில் வெடிகுண்டுகள் இருப்பதாக அந்த செய்தி கூற, உடனடியாக விமானிக்கு தகவல் அளிக்கப்பட்டது.

விமானி உடனடியாக பிரித்தானிய அதிகாரிகளின் உதவியை நாடினார். பிரித்தானிய அதிகாரிகள் விமானத்தை பிரித்தானியாவிலுள்ள Stansted விமான நிலையத்தில் தரையிறக்குமாறு கூறியதோடு, இரண்டு போர் விமானங்களையும் உடனே அனுப்பிவைத்தனர்.

போர் விமானங்களின் பாதுகாப்புடன் அவசரமாக Stansted விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது அந்த விமானம்.

விமானம் தரையிறங்கியதும் தயாராக காத்திருந்த பொலிசார் விமானத்துக்குள் நுழைந்தனர்.

ஐந்து நிமிடங்களுக்குப்பின், விமானத்துக்குள்ளிருந்த ஒருவரை பிடித்துக்கொண்டு வெளியேறினர் பொலிசார்.

அதைத் தொடர்ந்து விமனத்திலிருந்த பயணிகள் அனைவரும் விமானத்திலிருந்து வெளியேற்றப்பட்டனர்.

பின்னர் சம்பவம் தொடர்பாக ட்வீட் ஒன்றை வெளியிட்ட எசெக்ஸ் பொலிசார், பாதுகாப்பு தொடர்பான எச்சரிக்கை காரணமாக போலந்தின் க்ரக்கோவிலிருந்து அயர்லாந்தின் டப்ளின் நோக்கி புறப்பட்ட விமானம் ஒன்று Stansted விமான நிலையத்திற்கு திருப்பிவிடப்பட்டதாகவும், அதிகாரிகள் விசாரணை நடத்திக்கொண்டிருப்பதாகவும் தெரிவித்தனர்.

மேலதிக தகவல்கள் பின்னர் வெளியிடப்படும் என்றும் தெரிவித்துள்ளது பொலிசார் வெளியிட்டுள்ள அந்த செய்தி.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்