கொரோனா தடுப்பூசி தொடர்பில் பில்கேட்சின் மிக முக்கியமான கோரிக்கை

Report Print Fathima Fathima in ஏனைய நாடுகள்
78Shares

கொரோனா தடுப்பூசி மருந்துகளை தேவையான மக்களுக்கு வழங்க வேண்டும் என மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் நிறுவனரும், அறக்கட்டளை தலைவருமான பில்கேட்ஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

உலக நாடுகளையே ஆட்டம் காண வைத்துள்ளது கொரோனா வைரஸ், இன்றளவில் இதன் பரவலை கட்டுப்படுத்தமுடியாமல் சில நாடுகள் திணறி வருகின்றன.

ஊரடங்கும் பிறப்பிக்கப்பட்டு தற்போது சில நாடுகளில் இயல்பு வாழ்க்கை கட்டுப்பாடுகளுடன் மீண்டாலும் நாட்டின் பொருளாதாரத்தை சீரமைக்க வேண்டிய கட்டாயத்தில் அரசுகள் உள்ளன.

இந்த வைரசுக்கு தடுப்பூசி கண்டுபிடிக்கும் முயற்சியில் பலநாட்டு விஞ்ஞானிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ள நிலையில், ரஷ்யா மனிதர்களிடத்தில் வெற்றிகரமாக பரிசோதித்ததாக அறிவித்தது.

மருந்தின் பெயர், எப்போது பயன்பாட்டுக்கு வரும் என்பது தெரியாத நிலையில், கொரோனா தடுப்பூசி மற்றும் மருந்துகளை அதிக விலை கொடுப்பவருக்கு வழங்க வேண்டாம்.

மாறாக, மிகவும் தேவையான மக்களுக்கு அதை வழங்க வேண்டும் என்று பில்கேட்ஸ் வேண்டுகோள் விடுத்தார்.

கடந்த 11ம் திகதி கொரோனா பற்றி சர்வதேச எய்ட்ஸ் சங்கத்தால் நடத்தப்பட்ட ஒரு காணொலிக் கூட்டத்திலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மேலும், உயிர் மற்றும் பொருளாதாரத்தின் மீட்சியில் கொரோனா தடுப்பு மருந்து முக்கியத்துவம் பெற்றுள்ளது.

எனவே தொடர்புடைய மருந்துகளுக்காக உள்நோக்கத்துடன் போட்டியிடுவதை தவிர்க்க வேண்டும் என்று ஐரோப்பிய ஆணையம் மற்றும் உலகச் சுகாதார அமைப்பு ஏற்கனவே எச்சரிக்கை விடுத்துள்ளன என்பதையும் சுட்டிக்காட்டினார்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்