சொந்த மகனை பூனை கூண்டுக்குள் அடைத்து வைத்து வெந்நீரை அவன் மீது ஊற்றிய இளம்தம்பதி! அம்பலமான பகீர் சம்பவம்

Report Print Raju Raju in ஏனைய நாடுகள்
1352Shares

சிங்கப்பூரில் 5 வயது மகனைப் பலமுறை மிக மோசமாக துன்புறுத்திய பெற்றோருக்கு தலா 27 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

Ridzuan Mega Abdul Rahman (28) என்ற நபரும் அவர் மனைவி Azlin Arujunah (28)யும் 2016 இல் சிறுவனைத் துன்புறுத்தினர்.

அவர்கள் பல்வேறு பொருள்களைக் கொண்டு சிறுவனை அடித்ததோடு, அவன் மீது பலமுறை வெந்நீரை ஊற்றியும் காயப்படுத்தினர்.

மேலும் சிறுவனை பூனையை அடைத்து வைக்கும் கூண்டுக்குள் அடைத்து வைத்திருந்தனர். கடந்த 2016 அக்டோபர் மாதம் அவ்வாறு துன்புறுத்தப்பட்டபோது, சிறுவன் மயக்கமடைந்தான்.

6 மணி நேரத்துக்குப் பிறகே அவனுடைய பெற்றோர் சிறுவனை மருத்துவமனையில் கொண்டு சேர்த்தனர்.

சிறுவனுக்கு அறுவை சிகிச்சை மேற்கொண்டபோதும் பலன் இன்றி பரிதாபமாக உயிரிழந்தான்.

இதையடுத்து அவன் பெற்றோருக்கு ஆயுள் தண்டனை விதிக்க வேண்டும் என்று அரசுத்தரப்பு வழக்குரைஞர் வாதிட்டார்.

சிறுவனின் உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் காயங்களை ஏற்படுத்தியதன் தொடர்பிலேயே அவனுடைய பெற்றோர் மீது குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது என்பதை நீதிபதி சுட்டி காட்டினார்.

இதையடுத்து Ridzuan Mega Abdul Rahmanக்கு 27 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் 24 பிரம்படிகள் விதிக்கப்பட்டன.

சிங்கப்பூர் சட்டப்படி பெண்களுக்கு பிரம்படி கொடுக்கமுடியாது.

அதனால் Azlin Arujunahக்கு 27 ஆண்டோடு இன்னும் ஒரு ஆண்டு கூடுதலாக சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

உயிரிழந்த சிறுவனின் பெயர் வெளியிடப்படவில்லை, ஏனெனில் அவன் உடன்பிறந்தவர்களின் அடையாளத்தை பாதுகாக்க இந்த விடயம் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்