35 நாட்களாக நடுக்கடலில் இருந்தவர்களை தாக்கிய கொரோனா..! எங்கிருந்து எப்படி பரவியது? மர்மத்தை கண்டறிய முடியாமல திணறும் நாடு

Report Print Basu in ஏனைய நாடுகள்
568Shares

நடுக்கடலிருந்த 57 மாலுமிகளுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு எவ்வாறு ஏற்பட்டது என்ற மர்மத்தை தீர்க்க அர்ஜென்டினா அதிகாரிகள் முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.

அவர்கள் கடலில் இருந்தபோதும் பயணம் தொடங்குவதற்கு முன்பு அவர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட சோதனையில் கொரோனா இல்லை என உறுதியானது, மேலும் புறப்படுவதற்கு முன் அவர்கள் அனைவரும் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டனர்.

கடலில் 35 நாட்களுக்குப் பிறகு மீன்பிடி இழுவை கப்பல் இப்போது மீண்டும் துறைமுகத்திற்கு வந்துள்ளது, புதிய சோதனைக்குப் பிறகு 61 பணியாளர்களில் 57 பேருக்கு வைரஸ் இருப்பது கண்டறியப்பட்டது.

இரண்டு பேர் இப்போது மருத்துவமனையில் உள்ளனர் என தெற்கு மாகாணமானத்தில் சுகாதார அமைச்சர் டியெரா டெல் ஃபியூகோவின் தெரிவித்துள்ளார்.

பாதிக்கப்பட்ட குழுவினரிடையே ‘தொற்றுநோய்களின் காலவரிசையை’ நிறுவ எங்கள் குழு முயற்சிக்கிறது என தெரிவித்துள்ளார்.

இது கொரோனா தொடர்பான அனைத்து விளக்கங்களிலிருந்தும் அப்பாற்பட்டு உள்ளது, ஏனெனில் இத்தனை நாட்களுக்கு பிறகு மனித உடம்பில் கொரோனா அறிகுறி தோன்றும் என எங்கும் விவரிக்கப்படவில்லை என்று உஷுவா பிராந்திய மருத்துவமனையின் தொற்று நோய்கள் துறையின் தலைவர் லியாண்ட்ரோ பல்லடோர் கூறினார்.

மேலும், அறிகுறிகள் எவ்வாறு தோன்றின என்பதை எங்களால் இன்னும் விளக்க முடியவில்லை என குறிப்பிட்டுள்ளார்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்