‘உலகளாவிய அவசரநிலை’...மனித வரலாற்றில் முதல்முறையாக இவ்வாறு நடந்துள்ளது: மனித உரிமைகள் குழு எச்சரிக்கை

Report Print Basu in ஏனைய நாடுகள்
111Shares

கொரோனா தொற்றுநோய் உலகளவில் ‘கல்வி அவசரநிலையை’ ஏற்படுத்தியுள்ளது என்று மனித உரிமைகள் குழுவின் Save the Children வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுளள்து. .

9.7 மில்லியன் குழந்தைகள் ஒருபோதும் பள்ளிக்கு திரும்பாத அபாயத்தை இந்த தொற்றுநோய் ஏற்படுத்தியுள்ளது என்று மனித உரிமைகள் குழு குறிப்பிட்டுள்ளது

ஏழ்மையான மற்றும் மிகவும் ஒடுக்கப்பட்டவர்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள் என்று அறிக்கை கூறுகிறது.

ஏப்ரல் மாதத்தில் மட்டும் 1.6 பில்லியனுக்கும் அதிகமான மாணவர்கள் பள்ளியை விட்டு வெளியேறியுள்ளனர் மற்றும் மனித வரலாற்றில் முதல்முறையாக ஒரு முழு தலைமுறையினரின் கல்வி சீர்குலைந்துள்ளது.

கொரோனா தொற்றுநோய்க்கு முன்பே, 258 மில்லியன் குழந்தைகள் பள்ளியை விட்டு வெளியேறிவிட்டனர் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்