கர்ப்பிணி மனைவியால் திடீர் கோடீஸ்வரர் ஆகியுள்ள கணவன்! எப்படி தெரியுமா? ஆச்சரியப்படும் மக்கள்

Report Print Raju Raju in ஏனைய நாடுகள்
346Shares

வங்கதேசத்தில் கர்ப்பிணி மனைவியால் அவரின் கணவர் கோடீஸ்வரர் ஆகியுள்ளார்.

தினஞ்சூர் மாவட்டத்தை சேர்ந்தவர் ரஞ்சித் சந்திரா ராய். இவர் மனைவி கர்ப்பமாக உள்ளார்.

அவருக்கு வீட்டு பொருட்கள் மற்றும் உணவை பராமரிக்க குளிர்சாதனபெட்டி தேவையாக இருந்தது. இதையடுத்து கணவரிடம் அதை வாங்கி தருமாறு தொடர்ந்து கேட்டு கொண்டிருந்தார்.

கர்ப்பிணி மனைவியின் ஆசையின் நிறைவேற்ற தவணை முறையில் குளர்சாதனபெட்டியை ரஞ்சித் வாங்கினார்.

இந்த நிலையில் குளிர்சாதனப்பெட்டியை வாங்கிய சில நாட்களில் ரஞ்சித்துக்கு ஒரு போன் வந்தது.

அதில் குளிர்சாதனப்பெட்டி நிறுவனத்தின் சார்பில் பேசிய நபர் ரஞ்சித்துக்கு அதிர்ஷ்ட குலுக்கலில் பெரிய பரிசு விழுந்துள்ளது எனவும் அவர் கோடீஸ்வரர் ஆகிவிட்டதாவும் தெரிவிக்கப்பட்டது.

இதை கேட்டு மகிழ்ச்சியில் ஆழ்ந்த அவர் தனது பரிசு பணத்தை காசோலையாக பெற்று கொண்டார்.

அவர் கூறுகையில், இந்த பரிசு பணத்தை வைத்து முதலில் புதிய வீடு கட்டவுள்ளதாக தெரிவித்துள்ளார்.

சாதாரண நிலையில் இருந்த நபர் திடீர் கோடீஸ்வரர் ஆனது அப்பகுதியில் ஆச்சரியமாக பேசப்பட்டு வருகிறது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்