இந்த நாட்டுடன் மிகப் பெரிய பிரச்சனை வரப்போகிறது... தயாராக இருங்க! போர் குறித்து சீனாவை எச்சரிக்கும் அதிகாரி

Report Print Santhan in ஏனைய நாடுகள்

இந்தியா மற்றும் சீனாவிற்கிடையேயான மோதல் கண்டிப்பாக பெரிதாக வெடிக்கும், இது போராக மாற அதிக வாய்ப்புள்ளதாக கூறி, சீன அரசுக்கு அந்நாட்டு மூத்த இராணுவ அதிகாரி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இந்தியா, சீனா எல்லையில் லடாக் அருகே முன்பு எப்போதும் இல்லாத வகையில், கடந்த சில தினங்களாகவே பதற்றம் அதிகரித்து வருகிறது.

இதன் காரணமாக, லடாக்கின் அனைத்து பகுதிகளிலும் சீனா தொடர்ந்து படைகளை குவித்து வருகிறது.

அங்கு இந்தியாவின் இராணுவ படையும், விமான படையும் தீவிரமாக ரோந்து பணிகளை செய்து வருகிறது.

சமீபத்தில் நடந்த கல்வான் மோதலுக்கு பின் இரண்டு நாட்டு எல்லையிலும் போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் சீனாவின் முன்னாள் விமானப்படை மேஜர் ஜெனரல் மற்றும் அந்நாட்டு பாதுகாப்பு ஆலோசகர்களில் ஒருவரான குயோ லியாங் சீன அரசுக்கு கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அதில், இந்தியா சீனா பிரச்சனை இப்போது சரியாகாது. இது முழு அளவில் பெரிதாக வெடிக்க வாய்ப்புள்ளது. சீனா இதற்கு தயாராக இருக்க வேண்டும். இந்தியாவை நாம் குறைவாக எடை போட கூடாது

நமது எல்லைகளை நாம் கவனமாக பாதுகாக்க வேண்டும். எல்லையில் பாதுகாப்பை பலப்படுத்தும் வகையில் நாம் செயல்பட வேண்டும். முதல் ஆளாக நாம் படைகளை குவிக்க வேண்டும்.

நாம் போருக்கு தயாராக இருக்க வேண்டும். இந்தியாவை முதல் ஆளாக தாக்க தயாராக இருக்க வேண்டும். சிறிய சிறிய போர் மூலம் இந்தியாவை கட்டுப்படுத்த நாம் திட்டங்களை வகுக்க வேண்டும்.

இரண்டு நாடுகளும் அணு ஆயுத பலம் கொண்ட நாடுகள். எல்லையில் ஆயுதங்களை களமிறக்க நாம் தொடங்க வேண்டும்.

எப்போது வேண்டுமானாலும் இந்த பிரச்சனை மிக மோசமான நிலையை அடையும். அதேபோல் நாம் ரோந்து பணிகளை அதிகமாக்க வேண்டும்.

இந்தியா எப்போது வேண்டுமானாலும் அத்துமீறலை நிகழ்த்த வாய்ப்புள்ளது. முழுமையான பிரச்சனை தீர இப்போது வாய்ப்பு இல்லை.

எல்லையில் இந்தியாதான் அத்துமீறல்களை செய்து வருகிறது. சீனாவின் கேம்ப்களை இந்தியாதான் அத்துமீறி அகற்றி வருகிறது.

சீனா இதை அனுமதிக்க கூடாது. இதே சம்பவம் இனியும் தொடர்ந்தால் உடனே சீனா பதிலடி கொடுக்க வேண்டும்.

தக்க இராணுவ தாக்குதல் மூலம் இந்தியாவிற்கு சீனா உடனே பதிலடி கொடுக்க வேண்டும். எல்லையில் இந்தியாவின் அத்துமீறலை சீனா வேடிக்கை பார்க்க கூடாது.

பேச்சுவார்த்தை மூலம் பிரச்னையை தீர்க்கும் காலம் இனி இல்லை என்று குயோ லியாங் தெரிவித்துள்ளார்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்