காரில்... பொதுவெளியில் இளம் பெண்ணுடன் ஐ.நா அதிகாரியின் முகம் சுழிக்க வைக்கும் செயல்! கமெராவில் சிக்கிய அதிர்ச்சி காட்சி

Report Print Santhan in ஏனைய நாடுகள்

இஸ்ரேலில் ஐ.நா அதிகாரி ஒருவர் காரின் பின் இருக்கையில், பெண் ஒருவருடன் நெருக்கமாக இருக்கும் வீடியோ வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இஸ்ரேலில் டெல் அவிலில் இருக்கும் பரபரப்பான சாலையில், ஐ.நா அதிகாரியின் கார் ஒன்று நின்று கொண்டிருந்தது.

அப்போது அந்த காரின் உள்ளே இருந்த அதிகாரி, சிவப்பு நிறை உடை அணிந்திருக்கும் பெண் ஒருவருடன் நெருக்கமாக இருக்கிறார்.

வீடியோவைக் காண இங்கே க்ளிக் செய்யவும்...

இந்த காட்சியை கார் சாலையில் நின்று கொண்டிருந்த போது, அதன் அருகில் கட்டிடத்தில் இருந்த நபர் வீடியோவாக எடுத்து சமூகவலைத்தளங்களில் பதிவிட்டுள்ளார்.

சுமார் 18 வினாடிகள் ஓடும் அந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் இப்போது அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.

மேலும், பாலியல் குற்றங்களுக்கு எதிராக ஐ.நா தீவிர நடவடிக்கை எடுத்து வரும் நிலையில் இந்த வீடியோ சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

அந்த காரில் இருப்பவர்கள் ஒருமித்த உறவில் இருந்தார்களா அல்லது அந்த பெண் பாலியல் தொழிலாளியா என்பது குறித்து தெரியவில்லை.

இருப்பினும் இந்த சம்பவம் குறித்து ஐ.நா செய்தி தொடர்பாளர் Stephane Dujarric கூறுகையில், இந்த வீடியோ ஐ.நா-வை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. அந்த வீடியோவில் காணப்படும் காட்சிகள் வெறுக்கத்தக்கது என்று கூறியுள்ளார்.

இது தொடர்பாக முறையாக விசாரணை நடத்தப்படும். இந்த வார துவக்கத்தில் இந்த வீடியோவை ஐ.நா. முதலில் அறிந்திருந்தது, அது எங்கு படமாக்கப்பட்டது என்பது தங்களுக்குத் தெரியும் என்று கூறப்பட்டுள்ளது.

இதனால் இது குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று நம்பப்படுகிறது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்