போதைப்பொருள் கடத்தல்காரர்கள் இருவருக்கு உடனடி மரணதண்டனை: சீன நீதிமன்றம் உத்தரவு!

Report Print Balamanuvelan in ஏனைய நாடுகள்

சீன நீதிமன்றம் ஒன்று போதைப்பொருள் கடத்தல்காரர்கள் இருவருக்கு உடனடியாக மரணதண்டனையை நிறைவேற்ற உத்தரவிட்டுள்ளது.

Lin Shanju மற்றும் Li Zhiping என்னும் இருவர், 9,511 கிராம் ஹெராயின் மற்றும் 27,077 கிராம் crystal meth என்னும் இருவகை போதைப்பொருட்களை ஒரே மாதத்தில் கையாளும்போது கையும் களவுமாக சிக்கியுள்ளனர்.

Mr Lin கூட்டாளி ஒருவருடன் போதைப்பொருட்களை கொண்டு 150 கிலோமீற்றர் தூரம் பயணித்து Mr Li வீட்டுக்கு கொண்டு செல்வாராம். பின்னர் Mr Li அவற்றை வாங்கிக் கொள்வார்.

அப்படி பயணிக்கும்போது பொலிசாரிடம் கையும் களவுமாக சிக்கினார் Mr Lin. இதுபோக ஏராளமான போதைப்பொருட்களை Mr Li வீட்டிலிருந்து கைப்பற்றியுள்ளனர் பொலிசார்.

வழக்கை விசாரித்த நீதிமன்றம் அவர்களுக்கு மரணதண்டனை விதித்ததோடு, உடனடியாக அதை நிறைவேற்றவும் உத்தரவிட்டுள்ளது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்