தனிமைப்படுத்தப்பட்ட தாத்தா: புதிதாக பிறந்த பேரக்குழந்தையை பார்க்க துடிக்கும் புகைப்படம்

Report Print Vijay Amburore in ஏனைய நாடுகள்

கொரோனா வைரஸ் காரணமாக தனிமைப்படுத்திக்கொண்ட ஒரு வயதான முதியவர், புதிதாக பிறந்த பேரக்குழந்தையை கண்ணாடி வழியே பார்க்கும் நெஞ்சை உருக்கம் புகைப்படம் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

கொரோனா வைரஸானது உலகம் முழுவதும் தீவிரமடைந்து 13,643 பேரை பலிகொண்டுள்ளது. 317,309 பேர் வைரஸ் தாக்குதலுக்குள்ளாகியுள்ளனர்.

அதிலும் குறிப்பதாக, வயது முதிர்ந்தவர்கள் எளிதாக வைரஸ் தாக்குதலுக்கு ஆளாவதால் தங்களை தாங்களே வீடுகளில் தனிமைப்படுத்திக்கொண்டுள்ளனர்.

இந்த நிலையில் தனிமைப்படுத்திக்கொண்ட அயர்லாந்தை சேர்ந்த ஒரு வயதான முதியவர், தனது மருமகளுக்கு பிறந்த குழந்தையை கண்ணாடியின் வழியே பார்த்து மகிழ்ந்துள்ளார்.

இதனை குழந்தையின் அத்தை தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், "என் அப்பா தனது பேரனை முதல்முறையாக சந்திக்கிறார்" என குறிப்பிட்டுள்ளார்.

என் அப்பாவிற்கு புகைப்படம் எடுப்பது பிடிக்காது. எனது சகோதரன் மெச்சால், அவனது மகனை கைகளில் ஏந்தியிருப்பதை அப்பா ஆசையுடன் சிரித்தபடியே பார்க்கிறார். அப்பா இப்போது நன்றாக இருக்கிறார். விரைவில் குழந்தையை அவருடைய கைகளில் ஏந்துவார் என்று நம்புவதாக குறிப்பிட்டுள்ளார்.

இந்த புகைப்படமானது இணையத்தில் வைரலாகி வருகிறது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்