நெஞ்சு வலித்தது! உடல் என்னிடம் இல்லாதது போல உணர்ந்தேன்.. உலகளவில் கொரோனாவில் இருந்து மீண்டவர்களின் அனுபவங்கள்

Report Print Raju Raju in ஏனைய நாடுகள்

உலகம் முழுக்க கொரோனாவால் பாதிக்கப்பட்ட மக்கள் வைரஸ் தாக்கிய சமயத்தில் எப்படி உணர்ந்தோம் என்பது தொடர்பாக விளக்கம் அளித்து உள்ளனர்.

கொரோனா வைரஸ் காரணமாக உலகம் முழுக்க பலி எண்ணிக்கை 13,071 ஆக உள்ளது. 3 லட்சத்து 8 ஆயிரம் பேர் இந்த வைரஸ் காரணமாக இதுவரை பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

இதில் ஒரு நல்ல விடயம் என்னவென்றால் இந்த வைரஸ் மூலம் பாதிக்கப்பட்ட பலர் முழுமையாக சிகிச்சை பெற்று வீடு திரும்பி உள்ளனர். அதன்படி உலகம் முழுக்க மொத்தம் 95,834 கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு நலம் அடைந்து உள்ளனர்.

கொரோனா வைரஸ் தாக்கி பின் குணமடைந்து வீடு திரும்பி இருக்கும் இவர்களுக்கு வெளியே செல்ல கூடாது என்று அறிவுத்தப்பட்டு இருக்கிறது. இந்த நிலையில் வீட்டிற்குள் இருக்கும் இவர்கள் தங்கள் கொரோனா அனுபவங்களை போஸ்ட்டாக சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகிறார்கள்.

தங்களுக்கு எப்படி கொரோனா வந்தது. கொரோனா வந்த போது எப்படி உடலில் மாற்றங்கள் ஏற்பட்டது என்று விளக்கி உள்ளனர்.

அந்த வகையில் அமெரிக்காவை சேர்ந்த தியா டேவிஸ் என்ற பெண், எனக்கு திடீர் என்று நெஞ்சு வலித்தது. எனக்கு இருமல் வரவில்லை. ஆனால் கடுமையாக நெஞ்சு வலித்தது. அன்று என்னால் மூச்சு விட முடியவில்லை. தொடர்ந்து மூச்சு விட முடியாமல் உயிரே போகும் அளவிற்கு பயம் இருந்தது.

என் உடல் என்னிடம் இல்லாதது போல உணர்ந்தேன். அதுதான் இருப்பதிலேயே மோசமான அறிகுறி ஆகும், ஆனால் தொடர் சிகிச்சையால் மீண்டேன் என கூறினார்.

அதேபோல் ஜப்பான் டயமண்ட் பிரின்சஸ் கப்பலில் இருந்த கார்ல் கோல்டுமேன் தெரிவித்த போதும் எனக்கு கடுமையான வறட்டு இருமல் இருந்தது. அதேபோல் மிக லேசான காய்ச்சல் இருந்தது. இதை நான் சாதாரணமாக எடுத்துக்கொண்டேன். ஆனால் போக போக இருமல் அதிகம் ஆனது.

என்னால் மூச்சு விடமால் முடியாமல் நெஞ்சை யாரோ அமுக்குவது போல இருந்தது, என்று கூறியுள்ளார். தொடர்ந்து வந்தது மேலும் எனக்கு அதன்பின் கொரோனா என்று கூறினார்கள். எனக்கு எப்படி கொரோனா வந்தது என்று தெரியவில்லை. நான் நல்ல ஆரோக்கிய உணவுகளை மட்டும்தான் சாப்பிடுவேன்.

ஆனாலும் வந்தது. எனக்கு சாதாரண காய்ச்சல் என்றுதான் நினைத்தேன். தலைவலி இல்லை. ஆனால் நெஞ்சு மட்டும் இரவு நேரத்தில் மிக மோசமாக வலித்தது. உணவு சாப்பிட சிரமமாக இருந்தது, என்றுள்ளார்.

இப்படி பலரும் கொரோனாவில் இருந்து மீண்ட தங்களது அனுபவத்தை பகிர்ந்துள்ளனர்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்