என் தந்தைக்கு ஒன்றும் கொரோனா இல்லை: அதிபரின் மகன் ஊடகங்கள் மீது பாய்ச்சல்

Report Print Vijay Amburore in ஏனைய நாடுகள்

பிரேசில் அதிபருக்கு கொரோனா வைரஸ் தாக்கியிருப்பதாக செய்தி வெளியிட்ட ஊடகங்கள் மீது அவருடைய மகன் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளார்.

பிரேசிலின் ஜனாதிபதி ஜெய்ர் போல்சனாரோவிற்கு மேற்கொள்ளப்பட்ட கொரோனா சோதனையில் நேர்மறையை சந்தித்ததாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தின.

மேலும், இந்த தகவலை அவரது மகனும் பிரேசிலிய சேம்பர் ஆப் டெபியூட்டீஸ் உறுப்பினரான எட்வர்டோ போல்சனாரோ, Fox தொலைக்காட்சியிடம் உறுதிப்படுத்தியதாகவும் கூறப்பட்டது.

நோயறிதலை உறுதிப்படுத்த மேலதிக பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், இரண்டாவது சோதனை நாளின் பிற்பகுதியில் மேற்கொள்ளப்படலாம் என எதிர்ப்பார்ப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்த எட்வர்டோ போல்சனாரோ, கொரோனா தாக்குதலால் தனது தந்தை பாதிக்கப்பட்டிருப்பது ஒருபோதும் உறுதிப்படுத்தப்படவில்லை என்றும், தான் அப்படி எந்த பத்திரிக்கையிடமும் கூறவில்லை எனவும் கடும் கோபமடைந்துள்ளார்.

மேலும், தனது தந்தை மற்றும் மற்றொரு பிரேசிலிய அதிகாரி அகஸ்டோ ஹெலெனோ ஆகியோருக்கு மேற்கொள்ளப்பட்ட கொரோனா சோதனையில், நோய் பாதிப்பு இல்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்