உலகின் முக்கிய தலைவர்களை நிலைகுலையச் செய்துள்ள கொரோனா வைரஸ்: ஜனாதிபதி டிரம்பிற்கும் பாதிப்பு?

Report Print Arbin Arbin in ஏனைய நாடுகள்

சாதாரண பொதுமக்கள் மட்டுமின்றி பிரித்தானியா, கனடா, ஈரான் போன்ற நாடுகளின் முக்கிய தலைவர்களையும் கொரோனா வைரஸ் நிலைகுலையச் செய்துள்ளது.

கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ருடோவின் மனைவி சோஃபிக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், நோய் தொற்று பாதிக்காமல் இருக்க அவர் சுய தனிமைப்படுத்தலில் உள்ளார்.

அண்மையில் பிரித்தானியா சென்று வந்த இருவரின் ரத்தமும் பரிசோதனை செய்யப்பட்டது. இதில் சோஃபிக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதால் அவர் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டுள்ளார்.

பிரேசில் ஜனாதிபதி ஜாயர் போல்ஸனரோவின் செயலாளருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகியுள்ளது.

இதனால் ஜனாதிபதியும் ரத்த பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்துள்ள பிரேசில் ஜனாதிபதி, கொரோனா தொற்றுக்கு சிகிச்சை அளிக்கக் கூடிய வசதிகள் தமது நாட்டில் இல்லை என்று கூறியுள்ளார்.

புளோரிடா மாகாணத்தில் சில தினங்களுக்கு முன்னர் அமெரிக்க ஜனாதிபதி டிரம்பும் பிரேசில் ஜனாதிபதியும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது பிரேசில் ஜனாதிபதியின் செயலாளர் ஃபெபியோ உடன் இருந்தார். இதனால் ஜனாதிபதி டிரம்பிற்கும் தொற்று ஏற்பட்டு இருக்கும் என்ற பீதி ஏற்பட்டுள்ளது.

ஆனால் அமெரிக்க வெள்ளை மாளிகை நிர்வாகம் இதை மறுத்துள்ளதுடன், ஜனாதிபதி டிரம்பை மருத்துவ சோதனைக்கு உட்படுத்த தேவையில்லை என தெரிவித்துள்ளது.

ஈரானில் துணை ஜனாதிபதி மசூமே எப்டேகருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகியுள்ளது. அமைச்சர்கள் அலி அஸ்கார் மற்றும் ரெசா ரஹ்மானிக்கும் தொற்று உறுதி ஆகியுள்ளது.

போர்த்துக்கல் ஜனாதிபதி மார்சிலோ ரபலோ தம்மை தாமே தனிமைப்படுத்திக் கொண்டு வீட்டில் முடங்கியுள்ளார்.

இதனால் அவருக்கும் தொற்று பாதித்து இருக்கலாம் என்ற அச்சம் பொதுமக்களிடையே ஏற்பட்டுள்ளது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்