கொரோனா தீவிரத்தால் முஸ்லிம்களுக்கு அரசு முக்கிய வலியுறுத்தல்

Report Print Basu in ஏனைய நாடுகள்

கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்த நாட்டில் உள்ள முஸ்லிம்கள் வீட்டில் பிரார்த்தனை செய்யுமாறு குவைத் அரசு அறிவுறுத்தியுள்ளது.

குவைத்தில் 80 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.

புதிய கொரோனா வைரஸ் பரவுவதை எதிர்த்து வளைகுடா அரபு நாடுகள் நடவடிக்கைகளை முடுக்கிவிட்டுள்ளதால் குவைத் அதிகாரிகள் முஸ்லிம்களை வெள்ளிக்கிழமை வீட்டில் பிரார்த்தனை செய்யுமாறு கேட்டுக்கொண்டனர்.

கடந்த 24 மணி நேரத்தில் வளைகுடா அரபு நாடுகளில் 12-க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளன.

சவுதி அரேபியாவில் 17 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 62 ஆக அதிகரித்துள்ளன.

வெள்ளிக்கிழமை ஆறு அரபு நாடுகளில் 700க்கும் மேற்பட்ட நோய்த்தொற்றுகள் பதிவாகியுள்ளன. இதுவரை எந்த இறப்பும் அறிவிக்கப்படவில்லை.

பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலோர் ஈரானுக்கு பயணம் செய்திருக்கலாம் அல்லது திரும்பி வருபவர்களுடன் தொடர்பு கொண்டிருந்ததாக அதிகாரிகள் கூறுகின்றனர்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்