ஈரானின் மூத்த தளபதி கொரோனா வைரஸ்க்கு பலி

Report Print Basu in ஏனைய நாடுகள்

ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படையின் (ஐ.ஆர்.ஜி.சி) மூத்த தளபதியான நாசர் ஷபானி கொரோனா வைரஸால் இறந்துவிட்டார் என்று ஐ.ஆர்.ஜி.சி தெரிவித்துள்ளது.

ஈரானில் குறைந்தது ஐந்து ஐ.ஆர்.ஜி.சி உறுப்பினர்கள் கொரோனா வைரஸால் இறந்துள்ளனர் என ஐ.ஆர்.ஜி.சி செய்தித் தொடர்பாளர் ரமேசன் ஷெரீப் தெரிவித்துள்ளார்.

ஈரானில் கொரோனா பரவிதிலிருந்து குறைந்தது 13 ஈரானிய அரசின் முக்கிய புள்ளிகள் கொரோனா வைரஸால் இறந்துள்ளனர், மேலும் 11 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

வெள்ளிக்கிழமை நிலவரப்படி, ஈரானில் 514 பேர் வைரஸால் இறந்துள்ளனர், மேலும் 11,364 பேருக்கு நோய் தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

பாப் அல்-மண்டேப் ஜலசந்தியில் இரண்டு சவுதி டேங்கர்களைத் தாக்கி ஈரானின் உத்தரவுகளை ஹவுத்தி போராளிகள் நிறைவேற்றியதாக ஆகஸ்ட் 2018ல் ஷபானி வெளிப்படையாக ஒப்புதல் அளித்திருந்தார்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்