சீனாவை மொத்தமாக உலுக்கிய கொரோனா வைரஸ்... அண்டை நாடான தைவான் தப்பியது எப்படி?

Report Print Arbin Arbin in ஏனைய நாடுகள்

கொரோனா வைரஸ் பாதிப்பு சீனாவை ஒட்டு மொத்தமாக முடக்கிய நிலையில், அதன் அண்டை நாடான தைவான் பாதிப்பேதும் இன்றி தப்பியது எப்படி என்ற தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த இரு மாதங்களுக்கு முன்னர் சீனாவின் வுஹான் நகரில் இருந்து வெடித்துக் கிளம்பிய COVID-19 என்ற கொரோனா வைரஸ்,

இதுவரை உலகின் 132 நாடுகள் மற்றும் பிராந்தியங்களில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

உலகமெங்கும் இதுவரை 138,249 பேர் கொரோனா பாதிப்புக்கு இலக்கான நிலையில், சிகிச்சை பலனின்றி 5,082 பேர் இதுவரை மரணமடைந்துள்ளனர்.

சீனாவில் மட்டும் கொரோனா பாதிப்புக்கு இதுவரை 80,815 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 3,177 பேர் மரணமடைந்துள்ளனர்.

ஆனால் சீனாவின் அண்டை நாடான தைவானில் இதுவரை கொரோனா பாதிப்புக்கு ஒருவர் மரணமடைந்துள்ளதுடன், 50 பேர் மட்டுமே பாதிக்கப்பட்டுள்ளனர்.

அமெரிக்க, ஐரோப்பிய நாடுகள் பல கொரோனா பாதிப்பால் கடுமையாக போராடிவரும் நிலையில், தைவானின் இந்த நிலைக்கு அவர்களின் விரைவான நடவடிக்கை மற்றும் உடனடி தலையீடே முக்கிய காரணம் என சில சர்வதேச சுகாதார வல்லுநர்கள் பாராட்டுகிறார்கள்.

தைவான் கொரோனா வைரஸ் நெருக்கடியின் சாத்தியங்களை துவக்கத்திலேயே ஒப்புக்கொண்டதுடன்,

பாதிப்பில் இருந்து தமது குடிமக்களை தற்காத்துக் கொள்ள போதுமான நடவடிக்கைகளையும் துரிதமாக மேற்கொண்டது.

மேலும், சீனாவில் கொரோனா பாதிப்பு எகிறத் தொடங்கியதும், சீனா, ஹொங்ஹொங் மற்றும் மக்காவ் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து பயணிகளுக்கு தடை விதித்தது.

மட்டுமின்றி மருத்துவ பொருட்களை ஏற்றுமதிக்கும் தடை விதித்து அரசு உத்தரவிட்டது. மேலும், கொரோனா பாதிப்பு தொடர்பில் தைவான் அரசு முன்னெடுக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் அங்குள்ள மக்களும் ஒத்துழைத்துள்ளனர் என்றும் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்