கொரோனாவிடமிருந்து குழந்தையை பாதுகாக்க தந்தை உருவாக்கிய சூப்பர் கருவி! குவியும் பாராட்டுக்கள்

Report Print Basu in ஏனைய நாடுகள்

சீனாவில் தந்தை ஒருவர் தனது குழந்தைக்கு கொரோனா தொற்று ஏற்படும் அபாயத்தை தடுக்கும் வகையில் சூப்பர் சாதனம் ஒன்றை உருவாக்கியுள்ளார்.

சீனாவின் வுஹான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ் 127 நாடுகளுக்கு பரவி உலகிற்கு பெரும் அச்சுற்றுதலாக இருக்கிறது.

உலகளில் 4,990 பேர் உயிரிழந்துள்ளனர், 1,34.918 பேருக்கு நோய் தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.

3 வயதிற்கு உட்பட் குழந்தைகள் மற்றும் முதியவர்களுக்கு கொரோனா பாதிப்பு தீவிரமாக இருக்கும் என நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். எனவே, அவர்களை பொது இடங்களுக்கு அழைத்து செல்ல வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளனர்.

இந்நிலையில், ஷாங்காயில் உள்ள தந்தை, மருத்துவமனைகள் போன்ற பொது இடங்களுக்கு செல்லும் போது தனது குழந்தைக்கு கொரோனா தொற்று ஏற்படும் அபாயத்தைத் தடுக்க சிறிய பாதுகாப்பு அறையை உருவாக்கியுள்ளார்.

குறித்த சிறிய அறை கண்ணாடியால் செய்யப்பட்டதாக தெரிகிறது. அதற்குள் குழந்தை வைத்து பொது இடங்களுக்கு அழைத்து செல்கிறார்.

குறித்த வீடியோ சீனா சமூக ஊடகங்களில் பயங்கர வைரலாகியுள்ளது. சீன நெட்டிசன்கள் குறித்த கருவியைப் பாராட்டி வருகின்றனர்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்