கொரோனாவை வுஹானுக்கு கொண்டு வந்தது அமெரிக்க ராணுவம்தான்: சீனா குற்றச்சாட்டு!

Report Print Balamanuvelan in ஏனைய நாடுகள்
#S

கொரோனா, மக்களின் உடல் நலத்தை மட்டுமின்றி, நாடுகளுக்கிடையிலான நல்லுறவுகளையும் கெடுத்துவருகிறது.

ஒவ்வொரு நாடும் தங்கள் நாட்டில் கொரோனா பரவ காரணம் இந்த நாடுதான் என, மற்றொரு நாட்டை சுட்டிக்காட்ட ஆரம்பித்துவிட்டனர்.

நேற்று எங்கள் நாட்டில் கொரோனா பரவ ஜேர்மனிதான் காரணமாக இருக்கும் என முதல் குற்றச்சாட்டை முன்வைத்தது இத்தாலி.

இன்று, அமெரிக்க ராணுவம்தான் தங்கள் நாட்டுக்குள் கொரோனாவைக் கொண்டுவந்தது என சீன செய்தி தொடர்பாளர் ஒருவர் குற்றம் சாட்டியுள்ளார்.

அமெரிக்க அதிபர் ட்ரம்பின் தேசிய பாதுகாப்பு ஆலோசகரான Robert O'Brien, சீனா வுஹானில் இருந்து பரவிய கொரோனாவை தடுக்க சரியான நடவடிக்கைகளை விரைந்து எடுப்பதற்கு பதிலாக, அதை மூடி மறைப்பதிலேயே கவனம் செலுத்தியது.

அதனால், கொரோனாவை எதிர்கொள்வதற்கு உலகம் இரண்டு மாதங்களை செலவிடவேண்டியதாயிற்று என்றார்.

சீனாவிலும் உலகத்திலும் தற்போது நடக்கும் இந்த பயங்கரத்தை, அந்த இரண்டு மாதங்களுக்குள் பெருமளவில் குறைத்திருக்கலாம், கட்டுக்குள் கொண்டுவந்திருக்கலாம் என்றார் O'Brien.

அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, தெளிவான ஆங்கிலத்தில் ட்வீட் ஒன்றை வெளியிட்ட சீன வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் Zhao Lijian, அமெரிக்காதான் ஒளிவு மறைவு இல்லாமல் இருக்கவில்லை என அதிரடியாக குற்றம் சாட்டியுள்ளார்.

எப்போது அமெரிக்காவில் முதல் நபருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது? எத்தனை பேர் பாதிக்கப்பட்டுள்ளார்கள்?

எந்த மருத்துவமனைகளில் அவர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள். அமெரிக்க ராணுவம்தான் வுஹானுக்கு கொரோனாவையே கொண்டுவந்திருக்கவேண்டும்.

நீங்கள்தான் ஒளிவு மறைவில்லாமல் இருக்கவேண்டும், விளக்கம் கொடுங்கள் என சுடச்சுட தெரிவித்துள்ளார் Zhao Lijian.

அமெரிக்க அதிகாரிகள் இப்படி கருத்துச் சொல்லிக்கொண்டிருப்பது எந்த வகையிலும் கொரோனா பரவுவதை தடுக்க உதவாது என்று தெரிவித்துள்ளார் அவர்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்