கொரோனாவால் மொத்தமாக முடங்கிய நாடு: சுவிஸில் இருந்து பிள்ளைகளுடன் நாடு திரும்பிய இளவரசி

Report Print Arbin Arbin in ஏனைய நாடுகள்

சுவிட்சர்லாந்தில் கல்வி பயின்றுகொண்டிருந்த தமது பிள்ளைகளை திரும்ப அழைத்துக் கொண்டு நாடு திரும்பியுள்ளார் டென்மார்க் இளவரசி மேரி.

சீனாவுக்கு அடுத்து கொரோனா வைரஸ் பாதிப்பு பெரும்பாலான ஐரோப்பிய நாடுகளை புரட்டிப்போட்டுள்ளது.

மட்டுமின்றி, ஐரோப்பிய நாடுகளில் கொரோனாவால் அதிக இறப்புகளை எதிர்கொண்ட இத்தாலிக்கு அடுத்து தற்போது டென்மார் மொத்தமாக முடக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், சுவிஸில் பயின்று வந்த தமது 4 பிள்ளைகளையும் அழைத்துக் கொண்டு இளவரசி மேரி டென்மார்க் திரும்பியுள்ளார்.

கொரோனாவால் டென்மார்க் மொத்தமாக முடக்கப்பட்டுள்ள நிலையில், குடும்பத்துடன் மட்டுமின்றி டென்மார்க் மக்களுடன் ஒன்றாக இருப்பதே பொருத்தமாக இருக்கும் என குறிப்பிட்டுள்ள இளவரசி மேரி,

இந்த விடயம் தொடர்பில், உத்தியோகப்பூர்வ அறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளார். இந்த இக்கட்டான சூழலில் குடும்பத்துடன் ஒன்றிணைந்திருப்பது கிடைத்த பரிசு என குறிப்பிட்டுள்ள இளவரசி மேரி,

எஞ்சிய வாழ்நாளில் இந்த தருணத்தை தமது பிள்ளைகள் நினைப்படுத்திக் கொள்ளவும் இது வாய்ப்பாக அமையும் என இளவரசி மேரி தெரிவித்துள்ளார்.

ஐரோப்பாவில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பை அடுத்து மொத்தமாக முடக்கப்படும் இரண்டாவது நாடு டென்மார்க்.

டென்மார்க்கில் பாடசாலைகள், பல்கலைக்கழகங்கள் முதல் அனைத்து கல்வி நிலையங்களும் அடுத்த இரு வாரங்களுக்கு மூடப்படும் என வியாழனன்று பிரதமர் Mette Frederiksen அறிவித்துள்ளார்.

மட்டுமின்றி 100 பேருக்கு அதிகமாக கூடும் அனைத்து விழாக்களும் அடுத்த அறிவிப்பு வெளியாகும் வரை ரத்து செய்வதாகவும் அவர் அறிவித்துள்ளார்.

தனியார் நிறுவன ஊழியர்கள் தங்கள் குடியிருப்பில் இருந்தே பணியாற்றவும் பிரதமர் Mette Frederiksen கோரிக்கை வைத்துள்ளார்.

டென்மார்க்கில் இதுவரை கொரோனா பாதிப்புக்கு 674 பேர் இலக்காகியுள்ளனர். ஒரே வாரத்தில் மட்டும் புதிதாக 442 பேர் கொரோனா தொற்றுக்கு இலக்கானதை அடுத்தே டென்மார்க் மொத்தமாக முடக்கப்பட்டுள்ளது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்