கொரோனாவுக்கு கண்டுபிடிக்கப்படும் மருந்துகளை வெளியிட நடக்கப்படும் கூட்டம்! பயத்தில் ஆராய்ச்சியாளர்களின் முடிவு

Report Print Raju Raju in ஏனைய நாடுகள்

கொரோனா வைரஸ் குறித்து ஆராய்ச்சியாளர்களால் நடத்தப்படவிருந்த முக்கிய கூட்டம் அதே கொரோனா அச்சம் காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

சீனாவில் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகின் பல நாடுகளுக்கு பரவியுள்ளது.

இந்த வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 4900க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.

மேலும், 1 லட்சத்து 34 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு வைரஸ் பரவியுள்ளது.

இதற்கிடையில், மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை சர்வதேச நிடோவைரஸ் சிம்போசிசம் எனப்படும் விலங்குகள் மற்றும் மனிதர்களுக்கு பரவும் வைரஸ் தாக்குதல்கள் குறித்து (கொரோனா உள்பட) கூட்டங்கள் உலகின் எதேனும் ஒரு நாட்டில் நடைபெறுவது வழக்கம்.

இந்த கூட்டத்தில் வைரஸ் தொடர்பான ஆய்வுகளில் ஈடுபடும் அறிவியல் ஆராய்ச்சியாளர்கள் தங்கள் கண்டுபிடிப்புகளையும், ஆய்வு முடிவுகளையும் வெளியிடுவர்.

இந்நிலையில், மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் அறிவியல் ஆராய்ச்சியாளர்களின் கூட்டம் இந்த ஆண்டு மே 10 முதல் 14-ம் திகதி வரை நெதர்லாந்து நாட்டில் நடைபெறுவதாக இருந்தது.

ஆனால், தற்போது உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவி வருவதால் இந்த கூட்டத்தில் பங்கேற்க அறிவியல் ஆராச்சியாளர்கள் அச்சம் தெரிவித்தனர்.

இதையடுத்து, வைரஸ் தொடர்பான ஆய்வு கூட்டம் ரத்து செய்யப்பட்டு அடுத்த ஆண்டுக்கு ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்