கொரோனா இருப்பது தெரிந்தும் சிகிச்சை எடுக்காத கணவன்! நடந்த விபரீதம்... மணிக்கணக்கில் கதறி அழுத மனைவி

Report Print Raju Raju in ஏனைய நாடுகள்

இத்தாலியியில் கொரோனாவால் உயிரிழந்த கணவரின் சடலத்தை 48 மணி நேரத்துக்கும் அதிகமாக வீட்டில் வைத்து கொண்டு உதவி கேட்டு கதறி அழுத பெண் குறித்த கண்ணீர் தகவல் வெளியாகியுள்ளது.

சீனாவுக்கு அடுத்து இத்தாலியில் தான் கொரோனாவால் அதிக மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அங்கு 15000-க்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 1000-க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில் Borghetto Santo Spirito பகுதியில் உள்ள வீட்டில் சில தினங்களுக்கு முன்னர் கொரோனா பாதித்த நபர் உயிரிழந்தார்,

இதையடுத்து அவரின் உடலை வீட்டுக்குள் வைத்துவிட்டு, மாடி பால்கனிக்கு வந்த மனைவி தயவு செய்து யாராவது உதவுங்கள் என அழுதுள்ளார்.

48 மணி நேரத்துக்கும் அதிகமாக அவர் உதவி கோரிய நிலையிலும் அங்கு விதிக்கப்பட்ட கட்டுபாடுகள் காரணமாக யாரும் உதவவில்லை.

ஆனால் பின்னர் அரசாங்க ஊழியர்கள் அங்கு வந்து சடலத்தை அப்புறப்படுத்தினார்கள்.

இது குறித்து மேயர் கியன்கார்லோ கனிபா கூறுகையில், கட்டுபாடுகள் காரணமாக விதவை பெண் அங்கிருந்து வெளியேற அனுமதிக்கப்படவில்லை.

அதே போல அவர் கணவரின் சடலத்தை உடனடியாக அப்புறப்படுத்த முடியவில்லை.

எங்களுக்கான பாதுகாப்பு நெறிமுறைகளை நாங்கள் பின்பற்ற வேண்டிய சூழ்நிலையில் உள்ளோம்.

அதே நேரத்தில் அப்பெண்ணின் கணவருக்கு கொரோனா இருப்பது பரிசோதனையில் தெரிந்த பின்னரும் அவர் மருத்துவமனைக்கு செல்ல மறுப்பு தெரிவித்து வீட்டிலேயே இருந்துள்ளார்.

அவர் மட்டும் சரியான சிகிச்சையை மருத்துவமனைக்கு சென்று எடுத்திருந்திருந்தால் உயிர் பிழைத்திருக்கலாம் என கூறியுள்ளார்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்